திருவல்லிக்கேணியில் சிறப்பான ஏற்பாடுகள்: 12-ம் தேதி பார்த்தசாரதி கோயில் கும்பாபிஷேகம்

By செய்திப்பிரிவு

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் கும்பாபிஷேகம் வரும் 12-ம் தேதி வெள்ளிக்கிழமை நடக்க உள்ளது.

இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் (திருப்பணி) மா.கவிதா சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

108 வைணவ திவ்ய தேசங் களில் 64-வது திவ்ய தேசமாக வும், 5 எம்பெருமான்கள் எழுந்தரு ளியுள்ள திருத்தலமாகவும் திருவல்லிக்கேணி விளங்குகிறது. இக்கோயிலில் திருப்பணிகளை மேற்கொள்ள கடந்த ஜனவரியில் பாலாலயம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து திருப்பணிகள் தொடங்கப்பட்டு நடந்து முடிந் துள்ளன. கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 12-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் நடைபெற உள்ளது.

முன்னதாக 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை காலை, மாலை இருவேளையும் ஹோமங்கள், மாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள்ளாக மகாசாந்தி கும்ப திருமஞ்சனம், தீர்த்த விநியோகம் நடைபெறும். 12-ம் தேதி காலை 6.30 மணிக்கு பெருமாள் கும்பத் துடன் சன்னதியில் எழுந்தருளல் நடைபெறும்.

பக்தர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. 4 மாடவீதி களிலும் தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள் ளன. நாள் முழுவதும் ஆங்காங்கே அன்ன தானம் வழங்கப்படும். பக்தர்களின் பாதுகாப்புக்காக 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்படும். சிறப்பு காவல் நிலையமும் அமைக்கப்படுகிறது. பக்தர்களுக்கு இலவச லட்டு, குங்குமம், பெருமாள் படம் ஆகி யவை பிரசாதமாக வழங்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்