ஓய்வுபெற்ற ஊழியருக்கு பணப்பலன் வழங்குவதில் தாமதம்: லாபத்துடன் நடத்த முடியாவிட்டால் போக்குவரத்து கழகங்களை கலைக்கலாம் - உயர் நீதிமன்றம் கருத்து

போக்குவரத்து கழகங்களை லாபத்துடன் நடத்த வேண்டும், இல்லையெனில் அரசிடம் மானியம் பெற வேண்டும். அதுவும் முடியாவிட்டால் போக்குவரத்து கழகங்களை கலைத்துவிடலாம் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை கோட்டம், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து 2011 முதல் 2014 வரை ஓய்வுபெற்ற 75 பேர், ஓய்வுக்கான பணப்பலன்கள் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரர்கள் 75 பேருக்கும் ஓய்வு மூப்பு அடிப்படையில் 6 சதவீத வட்டியுடன் பணப்பலன் வழங்க 8.12.2014-ல் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து 75 பேரும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், விதிப்படி ஓய்வு பெற்றோரின் பணிக்கொடை தொகையை யாரும் நிறுத்தி வைக்க முடியாது. பணிக்கொடையை ஓய்வுபெற்ற 30 நாளில் வழங்க வேண்டும். அவ்வாறு தரப்படாவிட்டால் 3 முதல் 7 மாதம் வரை 7 சதவீதம் வட்டியும், ஓராண்டுக்குப்பின் 10 சதவீதம் வட்டியும் வழங்க வேண்டும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தனி நீதிபதி 6 சதவீத வட்டி மட்டுமே வழங்க உத்தரவிட்டுள்ளார். இதற்காகவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யலாம். ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் குறைந்தபட்சம் 12 சதவீத வட்டி வழங்க உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து கழகத்தின் நிதி நெருக்கடியை காரணம் காட்டி ஓய்வூதிய பலன்கள் தர மறுப்பதை ஏற்க முடியாது. எனவே, 18 சதவீத வட்டியுடன் ஓய்வூதிய பணப்பலன்களை தர உத்தரவிட வேண்டும். தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எஸ்.மணிக்குமார் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஜி.ஆர்.சுவாமிநாதன் வாதிட்டார். போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன் வாதிட்டார்.

விசாரணையின்போது தலைமை நீதிபதி, ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்க வேண்டியது கட்டாயம். அந்த பணம் தந்தால் மட்டுமே ஓய்வுக்குப் பிறகு அவர்களால் வாழ்க்கை நடத்த முடியும். ஓய்வூதிய பலன்கள் இல்லாமல் அவர்களால் எப்படி வாழ முடியும்? போக்குவரத்து கழகத்தை லாபகரமாக நடத்துவது பற்றி யோசிக்க வேண்டும். இல்லையெனில் அரசிடம் மானியம் பெற வேண்டும். அதுவும் முடியாவிட்டால் கலைத்துவிட வேண்டும். ஓய்வுபெற்றவர்களுக்கு ஓய்வுக் கான பலன்களை வழங்கும் வகையில் போக்குவரத்து கழகத்தை லாபத்தில் இயக்க முடியாவிட்டால், அதை நடத்துவதில் அர்த்தம் இல்லை. எனவே, இவர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் எப்போது வழங்கப்படும் என அரசிடம் கேட்டு இன்று அரசு வழக்கறிஞர் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்