குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலையால் துர்நாற்றம்: வேங்கடமங்கலம் மக்கள் சுவாசிக்க முடியாமல் கடும் பாதிப்பு - தொடர் முற்றுகை போராட்டம்

தாம்பரம் அடுத்த வேங்கடமங்க லத்தில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலையில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவ தால் சுற்றுப்பகுதி மக்கள் சாப்பிட முடியாமலும், சுவாசிக்க முடியாம லும் சிரமப்படுகின்றனர்.

தாம்பரம், பல்லாவரம், ஆலந் தூர் நகராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்டுவதற்காக தாம்பரம் அருகே உள்ள வேங்கட மங்கலத்தில் 50 ஏக்கரில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடங்க இடம் தேர்வு செய்து பணிகள் நடந்து வந்தது. இதற்கிடையில், ஆலந்தூர் நகராட்சி சென்னை மாநகராட்சி யுடன் இணைக்கப்பட்டது. இதை யடுத்து, அத்திட்டத்தில் ஆலந் தூருக்கு பதிலாக செம்பாக்கம் நகராட்சி சேர்க்கப்பட்டது.

திடக்கழிவு மேலாண்மை திட்டத் தின் பணிகள் 80 சதவீதம் முடிவடைந் துள்ள நிலையில், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி கடந்த சில வாரங்களாக சோதனை முறையில் நடந்து வருகிறது. தினமும் கொட்டப்படும் சுமார் 300 டன் குப்பையில் இருந்து சோதனை முறையில் மின்சாரம் தயாரிக்கும் பணி நடக்கிறது. இதன் காரணமாக, வேங்கடமங்கலம் மற்றும் அகரம்தென் அன்னை சத்யா நகர் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், சுவாசிக்க, சாப்பிடக்கூட முடியாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மக்கள் ஒன்றுதிரண்டு சென்று, மின்சார ஆலையை முற்றுகையிட்டு போராட் டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘நாற்றம் வீசுவதால் சாப்பிட முடியவில்லை. சுவாசிக்க முடியவில்லை. நிம்மதி யாக தூங்க முடியவில்லை. நாற்றம் தாங்காமல் குழந்தைகள் வாந்தி எடுக்கின்றன. மின்சாரம் தயாரிக் கும் திட்டத்தை நாங்கள் எதிர்க்க வில்லை. துர்நாற்றம் வராமல் செயல்படுத்துங்கள் என்றுதான் சொல்கிறோம். துர்நாற்றம் வெளியே வராமல் பாதுகாப்பான முறையில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

இதுதொடர்பாக பல்லாவரம் நகராட்சி பொறியாளர் சீனிவாசன் கூறியபோது, ‘‘வெளியே துர்நாற்றம் வீச வாய்ப்பு இல்லை. என்ன பிரச்சினை என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கிறோம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்