மத்திய அரசிடம் தமிழகம் எதிர்பார்ப்பது என்ன?: பட்டியல் தயாராகிறது

By எஸ்.சசிதரன்

தமிழகத்துக்கான தேவைகள் குறித்த கோரிக்கை பட்டியலை நரேந்திர மோடியிடம் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பட்டியலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கடந்த 2011-ம் ஆண்டில் முதல் வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற தும் மாநிலத்தின் தேவைகளை குறிப்பிட்டு, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் 18 பக்கங்கள் கொண்ட கோரிக்கை பட்டியலை கொடுத் தார். மத்திய கூட்டணி ஆட்சி யில் பங்கேற்றிருந்த திமுக, தமிழக திட்டங்களுக்கு உதவவில்லை என்றும் தமிழகத்தின் தேவைகளை புறக்கணித்து, மக்களை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வந்த தாகவும் முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார். மோடியுடன் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பல ஆண்டுக ளாக சுமுக உறவு இருந்து வருவ தால், தமிழகத்தின் தேவைகள் விரைவில் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, தமிழகத்தின் தேவை கள் கொண்ட பட்டியலை மோடி யிடம் கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தின் தலை மைச் செயலாளராக இருந்து கடந்த மாதம் ஓய்வுபெற்று, தற்போது முதல்வரின் ஆலோசகராக உள்ள ஷீலா பாலகிருஷ்ணனிடம் பட்டியல் தயாரிக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வெளிமாநிலத்தில் இருந்து வாங்கும் மின்சாரத்தை தமிழகம் கொண்டு வருவதற்கான வழித்தடம் அமைக்கும் பணியை துரிதப்படுத்த மாநில அரசு கோர வுள்ளது. ரெய்ச்சூர் - சோலாப்பூர் சிங்கிள் சர்க்யூட் டிரான்ஸ்மிஷன் லைன், தேசிய மின்தொகுப்புடன் இணைக்கப்பட்டுவிட்டாலும் முழுமையாக அப்பணிகள் முடிய வில்லை. அப்பணிகளை துரிதப் படுத்தினால் வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரத்தை தமிழகத் துக்கு எளிதில் கொண்டுவரலாம். எனவே, அதை வலியுறுத்த தமிழகம் முடிவு செய்துள்ளது.

பெட்ரோல், டீசலுக்கான இரட்டை விலை நிர்ணய முறையை மாற்றுவது, அரிசியை வேளாண் உற்பத்திப் பொருளாக மீண்டும் அறிவிப்பது, கூடங்குளம் அணு மின் நிலையத்தின் 2-வது அலகில் கூடுதல் மின்சாரத்தை கோருவது, காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறை ஆணையத்தை விரைவாக அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளும் பட்டியலில் இடம்பெறும் என்று தெரிகிறது.

மோடி பதவியேற்பு விழா

2012-ம் ஆண்டு நான்காவது முறையாக குஜராத் முதல்வராக மோடி பதவியேற்றபோது, அந்த விழா வில் ஜெயலலிதா பங்கேற்றார். இந்நிலையில், வரும் 26-ம் தேதி நடக்கவுள்ள மோடி பதவியேற்பு நிகழ்ச்சியிலும் முதல்வர் பங்கேற்க வாய்ப்புகள் உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்