கஸ்தூரிராஜா வாங்கிய கடன் விவகார வழக்கு: ரஜினிகாந்த் பதில் அளிக்க உத்தரவு

திரைப்பட இயக்குநர் கஸ்தூரி ராஜா கடனை திருப்பித் தராதது தொடர்பாக தொடரப்பட்ட வழக் கில் நடிகர் ரஜினிகாந்த் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சவுகார்பேட்டை யைச் சேர்ந்த எஸ்.முகுன்சந்த் போத்ரா என்பவர் உயர் நீதிமன்றத் தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

திரைப்பட இயக்குநர் கஸ்தூரி ராஜா என்னிடம் ரூ.40 லட்சம் கடன் வாங்கினார். இத்தொகையைத் திருப்பித் தருவதற்காக 2 காசோ லைகளை வழங்கினார். ஆனால், அவரது வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று 2 காசோலைகளும் திரும்பிவிட்டன.

கஸ்தூரிராஜா என்னிடம் கடன் வாங்கும்போது, தான் நடிகர் ரஜினிகாந்தின் சம்பந்தி என்றும், பணத்தைத் திருப்பித் தந்துவிடுவேன் என்றும் உறுதி அளித்தார். அதற்கான கடிதத் தையும் கொடுத்தார்.

இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறும்போது, தனது பெயரைப் பயன்படுத்த யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை என்று தெரிவித் தார். இதிலிருந்தே ரஜினிகாந்த் பெயரை கஸ்தூரிராஜா தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார் என்பது தெளிவாகிறது. இதுதொடர்பாக ரஜினிகாந்த் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அவர்கள் இருவருக்கும் இடையே சந்தேக நடவடிக்கைகள் இருக்கும் என்று கருதுகிறேன்.

எனவே, தனது பெயரை தவறாகப் பயன்படுத்தியதற்காக இயக்குநர் கஸ்தூரிராஜா மீது நடிகர் ரஜினிகாந்த் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

விசாரணை தள்ளிவைப்பு

இந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரபாபு விசாரித்து, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் கஸ்தூரிராஜா ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்