ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் விபத்தில் காயம்: ஆளுங்கட்சியினர் மீது டிராபிக் ராமசாமி சந்தேகம்

By செ.ஞானபிரகாஷ்

ஆர்.கே.நகர் தொகுதியில் முதலில் ஜெயலலிதாவுக்கு எதிரான வேட்பாளராக முதலில் அறிவிக்கப்பட்டவர் விபத்தில் காயமடைந்து புதுச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆளுங்கட்சியினர் சதிதான் இந்த விபத்துக்கு காரணம் என்று அவருடன் இருந்த டிராபிக் ராமசாமி குற்றம்சாட்டினார்.

சென்னையைச் சேர்ந்த சமூக சேவகர் டிராபிக் ராமசாமி. இவர் மக்கள் பாதுகாப்பு கழகம் என்ற அமைப்பின் தலைவராக உள்ளார். இந்த கழகத்தின் செயலாளராக இருப்பவர் பாத்திமா.

டிராபிக் ராமசாமி சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இதற்காக நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இந்த வேட்புமனு தாக்கலில் பங்கேற்பதற்காக பாத்திமா கும்பகோணத்திலிருந்து நேற்று இரவு புறப்பட்டு சென்னைக்கு ஜீப்பில் வந்து கொண்டிருந்தார்.

கடலூர் ஆலப்பாக்கம் அருகே இன்று அதிகாலை 1.30 மணிக்கு ஜீப்பை நிறுத்தியிருந்தனர். அப்போது எதிரே வந்த வாகனம் ஜீப்பின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பாத்திமா காயமடைந்தார். அவர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தகவலறிந்து டிராபிக் ராமசாமி கடலூர் வந்தார். பாத்திமா கடலூர் மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டார்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் பாத்திமாவிடம் நடந்த சம்பவம் பற்றி கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

மக்கள் பாதுகாப்பு கழகத்தின் சார்பில் பாத்திமா ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என அறிவித்திருந்தேன். அதன்பின்னர்தான் நான் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தேன்.

ஆளும்கட்சிக்கு இதுபற்றிய தகவல் சரியாக கிடைக்கவில்லை. இதனால் பாத்திமாவே போட்டியிடுகிறார் என நினைத்துக்கொண்டு திட்டமிட்டு அவர் மீது இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

ஏற்கனவே தஞ்சை போலீஸ் எஸ்பி பாத்திமாவை மிரட்டியுள்ளார். இந்த மிரட்டல் சம்பவத்தின்போது நானும் அங்கு இருந்தேன். இது திட்டமிட்ட சதி.

ஜெயலலிதா முதல்அமைச்சராக நீடிக்க தகுதி கிடையாது. சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக நான் வழக்கு தொடரவும் திட்டமிட்டுள்ளேன்.

நாளை பிற்பகல் 2 முதல் 3 மணிக்குள் என் வேட்புமனுவை தாக்கல் செய்வேன். ஊழலுக்கு எதிராக நான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். இந்த நிலையில் எந்த மாற்றமும் கிடையாது.

வாக்குகளை பெறுவதற்காகத்தான் அனைத்து கட்சியினரிடமும் ஆதரவு கேட்டேன். எப்போதும் ஊழலை எதிர்ப்பேன். ஊழல் தொடர்பாக திமுகவைச் சேர்ந்த தயாநிதி மாறன், தயாளு ஆகியோர் மீது நான் புகார் தந்தேன்.

தேர்தலில் போட்டியிடாததால்தான் கட்சியினரை சந்தித்து ஆதரவு கேட்டேன். அவர்கள் நேரடியாக என்னை ஆதரிப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. மறைமுக ஆதரவு தருவார்கள் என்று தெரிவித்தார்.

பின்னர் பிற்பகலில் பாத்திமாவை சென்னைக்கு டிராபிக் ராமசாமி ஆம்புலன்சில் மேல் சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்