5-ம் வகுப்பு வரை தமிழை கட்டாயப் பாடமாக்க வேண்டும்: இராம கோபாலன் வேண்டுகோள்

‘ஆங்கிலத் திணிப்பை அரசு செய்து வருவதால் தமிழ் மொழி அழியும் அபாயம் உள்ளது. எனவே, 5-ம் வகுப்பு வரை தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக்க சட்டம் இயற்ற வேண்டும்’ என்று இந்து முன்னணித் தலைவர் இராம கோபாலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கோவை கொடீசியா அருகே இந்து முன்னணியின் 7-வது மாநில மாநாடு வரும் ஞாயிற்றுக் கிழமை (ஜூன் 7) நடைபெற உள்ளது. மாநாட்டுப் பணிகளை நேற்று பார்வையிட்ட இராம கோபாலன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இரண்டு திராவிடக் கட்சிகளுமே பள்ளிகளில் ஆங்கில மொழி திணிப்பை செய்து வருகின்றன. இதனால், தமிழ் மொழி அழியும் அபாயத்தில் உள்ளது. குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் மொழிக் கல்வியை கட்டாயப் பாடமாக்க சட்டம் இயற்ற வேண்டும்.

தமிழக அரசு ஒரு புறம் பசு மாடுகளை இலவசமாக வழங்கி வருகிறது.

அதே வேளையில், மறுபுறம் பசு கடத்தல் மற்றும் பசுவதைச் செயல்களும் நடைபெற்று வருகின்றன. இதில் ஈடுபடும் கும்பல்கள், பல நூறு கோடி ரூபாய் லாபம் அடைந்து வருகின்றன. எனவே, பசு கடத்தலை அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்