சென்னையில் இரவு நேரங்களில் அதிவேகமாக செல்லும் பைக்குகளை பிடிக்க 200 இடங்களில் செக்போஸ்ட் அமைப்பு: போக்குவரத்து கூடுதல் கமிஷனர் தகவல்

சென்னையில் இரவு நேரங்க ளில் அதிவேகமாக பைக் ஓட்டுபவர் களை பிடிக்க 200 இடங்களில் செக் போஸ்ட் அமைக்கப் பட்டுள்ளதாக போக்குவரத்து கூடுதல் கமிஷனர் தாமரைகண்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை பாரிமுனை பகுதி யில் நேற்று முன்தினம் இரவு சாலையோரம் தூங்கியவர்கள் மீது அதிவேகமாக வந்த பைக் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் சாலையோரம் படுத்திருந்த மூன்று பேர் பலியானார்கள். பைக்கை ஒட்டி வந்த சாதிக் (18) என்ற இளைஞர் மீது கொலை வழக்குக்கு இணையான சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பைக்கில் அவருக்கு பின்னால் அமர்ந்து வந்த இரண்டு இளைஞர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் அதிவேகமாக பைக்கில் செல்பவர்களால் சென்னையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக போக்குவரத்து கூடுதல் கமிஷனர் தாமரைகண்ணன் ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:

சென்னையில் 200 இடங்களில் சோதனை மையங்கள் (செக் போஸ்ட்) அமைத்து இரவு நேரங் களில் பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள், வேகமாக பைக்கை ஓட்டுபவர்கள் மற்றும் மது அருந்திவிட்டு பைக் ஓட்டுபவர்களைப் பிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். முக்கியமாக ஜிஎஸ்டி சாலை, காமராஜர் சாலை, டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை, சர்தார் பட்டேல் சாலை போன்ற சாலை களில் தடுப்புகளை வைத்து போலீ ஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

வடசென்னை இளைஞர்கள்

சென்னையில் நடக்கும் பைக் ரேஸ்கள் பற்றி போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:

வடசென்னையை சேர்ந்த இளைஞர்களே சென்னையில் பைக் ரேஸ்களில் அதிகம் ஈடுபடுகின்றனர். சென்னையில் நீளமான மற்றும் வேகத்தடை இல்லாத சாலை களில் அதிக அளவு பைக் ரேஸ்கள் நடக்கிறது. பந்தயமாக பணம், பைக் போன்றவற்றை கட்டி இளைஞர்கள் இதில் ஈடுபடு கின்றனர். பைக் ரேஸ்களில் ஈடுபடு பவர்கள் ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் என விலை உயர்ந்த பைக்குகளை வைத் துள்ளனர். வட சென்னை பகுதியில் விலை உயர்ந்த பைக்குகள் வாடகைக்கு விடப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE