இணையதளம், சமூக ஊடகங்கள் மூலம் கருணாநிதிக்கு 48 லட்சம் பேர் பிறந்த நாள் வாழ்த்து

திமுக தலைவர் கருணாநிதிக்கு இணைய தளம், சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி மூலம் 47 லட்சத்து 66 ஆயிரத்து 837 பேர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி ஜூன் 3-ம் தேதி தனது 92-வது பிறந்த நாளை கொண்டாடினார். குறுஞ்செய்தி, இணையதளம், முகநூல், ட்விட்டர் மற்றும் கூகுள் பிளஸ் மூலம் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்து நேற்று வெளியிட்ட அறிக்கையில் கருணாநிதி கூறியிருப்பதாவது:

குறுஞ்செய்தி, ட்விட்டர், முகநூல், தொலைபேசி, கடிதம் மற்றும் நேரிலும் 47 லட்சத்து 66 ஆயிரத்து 837 பேர் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக ட்விட்டர் வலைத் தளத்தில் #HBDkalaignar என்ற ஹாஷ்டேகை பயன்படுத்தி ஏராள மானோர் எனக்கு வாழ்த்து தெரி வித்தனர். இதனால் ஜூன் 3-ம் தேதி இந்தியாவில் ட்விட்டர் டிரண்டில் எனக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இதற்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘‘இன்னும் 8 ஆண்டுகளில் 100-வது பிறந்த நாளை உங்க ளோடு கொண்டாடுவேன். உடல் தளர்ச்சி நீங்கி, உணர்ச்சியும், உத்வேகமும் கிடைக்க உங் களைத்தான் நம்பியிருக்கிறேன். தொண்டர்களாகிய நீங்கள் எந்த அளவுக்கு எழுச்சியோடு இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு நானும் தளர்ச்சி நீங்கி தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பாடுபடுவேன்’’ என குறிப்பிட்டிருந்தேன்.

பல லட்சக்கணக்கானோர் தெரி வித்த வாழ்த்துகள், எனது மக்கள் பணியை ஊக்குவிப்பதாகவும், மேலும் பணியாற்ற தூண்டு கோலாகவும் அமைந்துள்ளது என கருணாநிதி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

38 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்