மு.க. அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் விரும்பினால், அவர்களை காங்கிரஸில் சேர்த்துக் கொள்ளத் தயாராக இருப்பதாக, முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
திமுக.விலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள மு.க.அழகிரி, தனது ஆதரவு எம்.பி.க்களுடன் சென்று, பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் தேர்தலில் எங்கள் பங்கு நிச்சயம் இருக்கும் என்று, மு.க.அழகிரி பேட்டியளித்துள்ளார். இதனால் மு.க.அழகிரி வேறு கட்சியில் சேர்ந்து திமுக-வுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப் போகிறாரா என்று எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் அழகிரியின் சந்திப்பு குறித்து, காங்கிரஸின் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டி:
மு.க.அழகிரி, திடீரென பிரதமரை சந்தித்துப் பேசியுள்ளாரே? அவர் காங்கிரஸில் சேரப்போகிறாரா?
அழகிரி காங்கிரஸில் சேரப் போகிறாரா என்பது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிதான் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க முடியும்.
உண்மையாகவே பிரதமரை அழகிரி எதற்காகச் சந்தித்தார்?
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக மத்திய காங்கிரஸ் அமைச் சரவையில் இடம்பெற்றிருந்த மு.க.அழகிரி, எந்தவித பிரச்சினை களுமின்றி இனிமையாக பணியாற் றினார். அவர் பிரதமரை சந்தித்துப் பேசியது மரியாதை நிமித்தமான தாகவே நினைக்கிறேன்.
ஒன்பது ஆண்டுகாலமாக கூட்டணியிலிருந்த காங்கிரஸை, திமுக தனித்து விட்டுள்ளதால், அழகிரியை வைத்து திமுகவை எதிர்த்து பிரச்சாரம் செய்ய போகிறீர்களா?
மிகப் பெரிய தேசிய கட்சி காங்கிரஸ் கட்சிக்கு அழகிரியை வைத்துத்தான் திமுகவை எதிர்த்துத் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டுமென்ற அவசியம் இல்லை.
அழகிரி, அவரது ஆதரவாளர்கள் மற்றும் திமுக அதிருப்தியாளர்களை காங்கிரஸில் சேர்த்துக் கொள்வீர்களா?
அழகிரி மட்டுமல்ல யாராக இருந்தாலும், காங்கிரஸின் கொள்கையில் ஈர்ப்பு கொண்டு, கட்சியில் சேர விரும்பி னால், அவர்களை விருப்பு, வெறுப்பில்லாமல் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
மத்திய அமைச்சர் வாசன் உள்பட தமிழக காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் தேர்தலில் நிற்க தயக்கம் காட்டுகிறார்களே? கூட்டணி இல்லை என்றா.. தோல்வி பயமா?
கூட்டணி இல்லை என்பதால் அனைத்து தொகுதிகளிலும் வலுவான பிரச்சாரம் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில்தான், வாசன் தேர்தலில் போட்டியிட வில்லை என்று நான் நினைக்கிறேன்.
இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago