குரூப்-1 மெயின் தேர்வு முடிவு 2 மாதங்களில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி

குரூப்-1 மெயின் தேர்வு முடிவு 2 மாதங்களில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

வருவாய் கோட்டாட்சியர் (ஆர்டிஓ), காவல்துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரித் துறை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் ஆகிய பதவிகளில் 79 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 மெயின் தேர்வு சென்னையில் நேற்று தொடங்கியது. எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சூளை செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவல்லிக் கேணி என்கேடி தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 43 மையங்களில் நடைபெற்ற தேர்வினை 4,300-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதினர்.

என்.கே.டி. தேசிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வே.ஷோபனா ஆகியோர் நேற்று 11 மணிக்கு ஆய்வு செய்தனர். பின்னர் பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:

தற்போது நடைபெற்று வரும் குரூப்-1 மெயின் தேர்வின் முடிவு 2 மாதங்களில் வெளியிடப்படும். புதிய குருப்-1 தேர்வு பற்றிய அறிவிப்பு 2 வாரத்தில் வெளியாகும். நேர்காணல் அல்லாத சார்நிலைப் பணிகளுக்கு (குருப்-2-ஏ தேர்வு) காலியிடங்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே, இன்னும் 3 வாரங்களில் குரூப்-2-ஏ தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடுவோம். ஏற்கெனவே நடந்து முடிந்த ஒருங்கிணைந்த பொறியாளர் பணி தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்