சுஷ்மா, வசுந்தராவை பதவி நீக்க வேண்டும்: தமாகா மூத்த தலைவர் எஸ்.ஆர்.பி கருத்து

By செய்திப்பிரிவு

‘வசுந்தரா ராஜே, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர், தேடப்படும் குற்றவாளிக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக பதவி நீக்கம் செய்து, அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும்’ என்று தமாகா மூத்த தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

கோவையில் `தி இந்து’வுக்கு நேற்று அவர் அளித்த பேட்டி:

வெளிவிவகாரத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இங்கிலாந்தில் இருந்த லலித் மோடிக்கு உதவியுள்ளார் என்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது. ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, அவருக்கு அந்த நாட்டில் தங்குவதற்கு பரிந்துரைக் கடிதம் எழுதியிருக்கிறார். அவரது மகனும், எம்பியுமான துஷ்யந்த் சிங், புதிதாக தொடங்கிய கம்பெனிக்கு பங்கு வர்த்தகம் என்ற பெயரில் ரூ.8.5 கோடியும், ரூ.3.5 கோடி கடனாகவும் லலித் மோடி கொடுத்துள்ளார்.

பாஜகவை பொறுத்தவரை, சுஷ்மா ஸ்வராஜ் நடவடிக்கைக்கு ஆதரவாகச் செயல்படும் நிலைப்பாட்டையும், வசுந்தரா ராஜேவின் நிலையை அவரே தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் எடுத்துள்ளதாகவே தெரிகிறது.

இந்த முரண்பட்ட நடவடிக்கை கள், பாஜக மீது அனைத்து தரப்புக்கும் மிகுந்த சந்தேக ரேகையை ஏற்படுத்தியிருக் கிறது என்று எஸ்.ஆர்.பி. தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்