தமிழகத்தில் இன்று தொடங்கும் குரூப் 1 மெயின் தேர்வு எழுத, மாற்றுத்திறனாளி ரமேஷுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டும் என்று உயர் நீதி மன்றம் நேற்று உத்தரவிட்டது.
இதுதொடர்பாக மாற்றுத் திறனாளி ஆர்.ரமேஷ் உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு வில், “ஆதிதிராவிடர் வகுப்புச் சேர்ந்த நான் எம்.எஸ்சி பட்டம் பெற்றுள்ளேன். குரூப் 1 முதல் நிலைத் தேர்வில் வெற்றிபெற் றுள்ளேன். மெயின் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளேன். இந்த தேர்வு ஜூன் 5-ம் தேதி தொடங்கி 7-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
நான் மாற்றுத்திறனாளியாக இருப்பதால், உதவியாளர் உதவியுடன்தான் தேர்வு எழுத முடியும். அதனால் மற்றவர் களைப் போல 3 மணி நேரத்தில் தேர்வை எழுதி முடிக்க முடியாது. எனவே, 1993-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதியிட்ட சமூக நலத்துறை அரசாணைப்படி, தனக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு கோரிக்கை மனு கொடுத்தேன். அதற்கு எவ்வித பதிலும் வரவில்லை. எனவே, எனக்கு குரூப் 1 மெயின் தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
உயர் நீதிமன்ற நீதிபதி டி.ஹரிபரந்தாமன் இவ்வழக்கை விசாரித்து நேற்று பிறப்பித்த உத்தரவு:-
சமூக நலத்துறை பிறப்பித் துள்ள உத்தரவில், தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது கூடுதலாக 30 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் தெரிவிப்பது சரியல்ல. எனவே, அரசாணையில் குறிப் பிட்டுள்ளதுபோல மனுதாரருக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டும் என்று நீதிபதி ஹரிபரந்தாமன் உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago