கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு 3 லட்சம் பேரை சுமந்து சென்ற ‘விவேகானந்தா’ படகை பழுதுபார்க்க முடிவு

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு 3 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வரை சுமந்து சென்ற பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான `விவேகானந்தா’ படகு பழுதுபார்க்கப்பட இருக்கிறது.

தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் மூலம் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளவர் சிலைக்கு செல்வதற்காக விவேகானந்தா, பொதிகை, குகன் ஆகிய 3 படகுகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் `விவேகானந்தா’ படகு இதுவரை 3 லட்சம் பேரை சுமந்து சென்றுள்ளது. இதனை முழுமையாக பழுது பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, `பொதிகை, குகன் ஆகிய இரு படகுகளும் 2008-ம் ஆண்டில் வாங்கப்பட்டன. இவை இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை பழுதுபார்க்கப்பட்டு இன்ஜின், இருக்கைகள் மற்றும் படகின் பிற பகுதிகள் அனைத்தும் சீரமைக்கப்படுகின்றன. 2013-ம் ஆண்டில் வாங்கப்பட்ட `விவேகானந்தா’ படகு இதுவரை முழுமையாக பழுதுபார்க்கப் படவில்லை.

கடந்த இரு ஆண்டுகளில் சராசரியாக தினமும் 500 பேருடன் பயணித்துள்ளது. இரு ஆண்டுகளில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் விவேகானந்தாவில் சவாரி செய்துள்ளனர்.

வழக்கமாக சிறுசிறு கோளாறுகளை படகு இல்லத்திலேயே சரி செய்வது இயல்பு. `விவேகானந்தா’ படகை வாங்கி இரு ஆண்டுகள் கடந்த நிலையில், அதனை பழுதுபார்க்கும் பணிக்காக சின்னமுட்டம் துறைமுகத்தில் உள்ள படகு சீரமைப்பு தளத்துக்கு அனுப்பவுள்ளோம்.

வரும் 20-ம் தேதியில் இருந்து அடுத்த ஜூன் 1-ம் தேதிக்குள் படகு பழுதுபார்ப்பு பணி தொடங்கும். தற்போது கூட்டம் குறைவாக உள்ள நிலையில் குகன், பொதிகை ஆகிய இரு படகுகள் போக்குவரத்தே போதுமானதாக உள்ளது.

`விவேகானந்தா’ பழுதுபார்க்கப் பட்ட பின், இதுபோல் கூட்டம் குறைந்த நேரங்களில் மற்ற இரு படகுகளும் பழுதுபார்ப்பு பணிக்கு அனுப்பப்படும்’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்