ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை: அழகிரி எடுக்கப் போகும் முடிவு என்ன?- பங்கேற்பவர்களை கணக்கெடுக்க திமுக தலைமை உத்தரவு

By செய்திப்பிரிவு

திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி, தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். நாடாளுமன்றத் தேர்தலில் எந்த நிலைப்பாட்டை எடுப்பது என்பது குறித்து ஆதரவாளர்களிடம் கருத்து கேட்கிறார்.

அழகிரி நடத்தும் கூட்டத்தில் பங்கேற்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது.

மதுரையில் சர்ச்சைக்குரிய சுவரொட்டிகளை ஒட்டிய விவகாரம் தொடர்பாக திமுக முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதன்பிறகு அழகிரி, திமுகவுக்கு எதிராக கருத்துகளை கூறி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலில் அழகிரிக்கோ அவரது ஆதரவாளர்களுக்கோ சீட் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற அழகிரி, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்துள்ளார். பின்னர் சென்னை திரும்பிய அழகிரி, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார். அழகிரியின் இந்த திடீர் நடவடிக்கைகள், தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின.

அவர் காங்கிரஸுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போகிறார் என்றும், புதிய கட்சி துவங்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகின. இதுபற்றி அழகிரியிடம் கேட்டபோது, ‘எந்த முடிவாக இருந்தாலும் எனது ஆதரவாளர்களைக் கேட்டுதான் எடுப்பேன். மதுரையில் 17-ம் தேதி (இன்று) ஆலோசனை நடத்த உள்ளேன்’ என தெரிவித்தார்.

அதன்படி, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தனது ஆதரவாளர்களுடன் மதுரையில் அழகிரி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இதில் அவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை திமுக தலைமை எதிர்பார்த்துள்ளது.

அதே நேரத்தில் அவரது கூட்டத்தில் பங்கேற்கும் திமுக முக்கியப் பிரமுகர்களின் பட்டியலை தயாரித்து அனுப்புமாறு மதுரை மாநகர திமுகவுக்கு தலைமையிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அழகிரியின் கூட்டத்தில் பங்கேற்போர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க திமுக முடிவு செய்துள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்