முழுமையான அஞ்சல் சேமிப்பு திட்டத்தில் கிராம மக்கள் பயன்பெறலாம்: சென்னை மண்டல அஞ்சல் துறை தகவல்

முழுமையான அஞ்சல் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து கிராம மக்கள் பயன்பெறலாம் என்று சென்னை மண்டல தலைமை அஞ்சல் அலுவலர் மெர்வின் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.

முழுமையான கிராமப்புற அஞ்சல் சேமிப்பு (சம்பூர்ணா தாக் பச்சாத் கிராம யோஜனா) திட்டத்தை இந்திய அஞ்சல் துறை அறிமுகம் செய்துள்ளது. மாதிரி கிராம திட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட அரக்கோணம், தென் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், பெரும்புதூர், மத்திய சென்னை, திருவண்ணாமலை, ஆரணி, திருவள்ளூர், புதுச்சேரி ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள கிராம மக்கள் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறுவார்கள்.

இத்தொகுதிகளில் உள்ள தண்டலம், ஒட்டியம்பாக்கம், ஓரதி, திருவக்கரை, வல்லக்கோட்டை, கூடூர், மேலரந்தவாடி, அருங்குளம், செல்லிபட்டி உள்ளிட்ட கிராமங்கள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. சிறப்பு முகாம்கள் மற்றும் மேளாக்கள் மூலம் இத்திட்டத்தை சென்னை மண்டல அஞ்சல் அலுவலகம் பிரபலப்படுத்த உள்ளது. இந்த கிராமங்கள் அல்லது பஞ்சாயத்துகளில் உள்ள மக்கள் சேமிப்பு கணக்கு திட்டத்தின் கீழ் ஒன்று அல்லது பல கணக்குகளை தொடங்கி, சிறு சேமிப்பு திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.

இவ்வாறு சென்னை மண்டல தலைமை அஞ்சல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

38 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்