தீவிரமடைகிறது தென்மேற்கு பருவமழை: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை

By செய்திப்பிரிவு

கடந்த 5-ம் தேதி தொடங்கிய தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தின் பெரும் பாலான இடங்களில் தென்மேற்கு பருவமழை பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜூன் 1-ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட பருவமழை 4 நாட்கள் தாமதமாக தொடங்கினாலும், பருவமழைக்கு முன்பே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வந்தது. கடந்த 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை தமிழ்நாட்டில் சராசரியாக 25.8 மி.மீ., புதுச்சேரியில் சராசரியாக 1.7 மி.மீ. மழை பெய்துள்ளது.

கடந்த 10 நாட்களில் அதிகபட்ச மாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 57.4 மி.மீ. மழை பெய்துள்ளது. நீலகிரியில் 49.3 மி.மீ., கன்னியா குமரியில் 46.5 மி.மீ., திண்டுக்கல்லில் 45.6 மி.மீ., ஈரோட்டில் 45.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தென்மேற்கு பருவமழை கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழ கத்தின் பெரும்பாலான இடங்களில் தீவிரமடைந்து வருகிறது என்றும் அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டையில் 5 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் திருவா லங்காடு, பூந்தமல்லி மற்றும் பள்ளிப் பட்டு, வேலூர் மாவட்டம் காவேரிப் பாக்கம் ஆகிய இடங்களில் 4 செ.மீ., வேலூர் மாவட்டம் சோளிங்கர், அரக்கோணம், திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஆகிய இடங் களில் 3 செ.மீ. மழை நேற்று பதிவாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்