கடந்த ஆண்டு பொறியியல் கட் -ஆப் மார்க் எவ்வளவு?- கல்லூரி, பாடப்பிரிவு, இடஒதுக்கீடு வாரியாக வெளியீடு

By செய்திப்பிரிவு

கடந்தாண்டு பொறியியல் கட்- ஆப் மார்க் பட்டியலை கல் லூரிகள், பாடப்பிரிவுகள், இடஒதுக் கீடு வாரியாக அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது.

பொறியியல் படிப்பில் சேருவ தற்கு மே 3-ம் தேதி முதல் விண்ணப்ப படிவங்கள் வழங்கப் பட்டு வருகின்றன. இதுவரை ஒரு லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற் பனையாகி இருக்கின்றன. பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை மே 20-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்கிடையே, பிளஸ்-2 தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை வெளி யானது. இதில், பொறியியல் படிப்புக்கான கணிதம், இயற் பியல், வேதியியல் பாடங்களில் 8,285 பேர் 200-க்கு 200 மதிப் பெண் எடுத்துள்ளனர். இதன் காரணமாக இந்த ஆண்டு பொறி யியல் படிப்புக்கான கட் ஆப் மார்க் அதிகரிக்கும் என்று கல்வி யாளர்கள் கருத்து தெரிவித்துள் ளனர்.

கடந்த ஆண்டு கட்- ஆப் மார்க்

இந்த நிலையில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவ-மாணவிகளின் வசதிக் காக அண்ணா பல்கலைக் கழகம்,கடந்த ஆண்டு கட்- ஆப் மார்க் விவரங்களை இணைய தளத்தில் (www.annauniv.edu) வெளியிட்டுள்ளது.

இதில், கல்லூரிகள், பாடப் பிரிவுகள், இடஒதுக்கீடு வாரி யான கட் -ஆப் விவரங் களை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். இதன்மூலம், இந்த ஆண்டு எவ்வளவு கட்- ஆப் மார்க் வரும் என்பதை ஓரளவுக்கு ஊகிக்க முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

39 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்