புதுச்சேரி அருகே கடலோர காவற்படை விமானம் மாயம்

இந்திய கடலோர காவற்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று புதுச்சேரி அருகே மாயமானது. மாயமான விமானத்தை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து கடலோர காவற்படை மூத்த அதிகாரி ஒருவர் 'தி இந்து'விடம் கூறும்போது,

"நேற்று (திங்கள் கிழமை) மாலை 5 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்ட அந்த சிறிய ரக விமானம் புதுச்சேரி நோக்கிச் சென்றதது. விமானத்தில் 2 பைலட்டுகள் உட்பட மூன்று பேர் இருந்தனர். வழக்கமான ரோந்துப் பணியில் அந்த விமானம் ஈடுபட்டிருந்தது.

சரியாக இரவு 10 மணியளவில் விமானம் கட்டுப்பாட்டு அறை தொடர்பில் இருந்து விலகியது.

இதனையடுத்து விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தேடுதல் வேட்டையில் 8 ரோந்துக் கப்பல்கள் மற்றும் 2 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன" என்றார்

காரைக்கால் சீர்காழியிடையை மாயமான சிறிய விமானம் சர்வதேச கடல் எல்லையில் விழுந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இருப்பினும் மீனவர்கள் விமான பாகங்களை கண்டால் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்