ஆவின் நிறுவனத்தில் ரூ. 410 கோடியில் உள்கட்டமைப்பு மேம்பாடு 35 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தப்பட்டு விநியோகம்: பால்வளத் துறை அமைச்சர் ரமணா தகவல்

கடந்த 4 ஆண்டுகளில் ரூ.410 கோடி மதிப்பில் ஆவின் நிறுவன உள் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு, நாள்தோறும் 35 லட்சம் லிட்டர் பதப்படுத்தப்பட்ட பால் விநியோகிக் கப்படுவதாக பால்வளத் துறை அமைச்சர் ரமணா தெரிவித்தார்.

திருவள்ளூர் அருகே உள்ள காக்களூர் ஆவின் பால் குளிரூட்டும் மைய வளாகத்தில், புதிதாக அமைக் கப்பட்டுள்ள ஆவின் பால் உபபொருட் கள் மொத்த விற்பனை நிலையத்தை தமிழக பால்வளத் துறை அமைச்சர் ரமணா, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அப்துல்ரஹீம் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.

விழாவில் பால்வளத் துறை அமைச்சர் ரமணா தெரிவித்ததாவது: காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட் டம் முழுவதும் ஆவின் பால் உபபொருட்கள் எளிதாக கிடைத் திட ஏதுவாக காக்களூரில் மொத்த விற்பனை நிலையம் திறக்கப்பட் டுள்ளது. இதுபோன்று தமிழகம் முழுவதும் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் ஆவின் பால் உபபொருட்கள் மொத்த விற்பனை நிலையம் திறக்கப்பட உள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தியதால், நாள் ஒன் றுக்கு பால் கொள்முதல் 35 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் 410 கோடி ரூபாய் மதிப்பில் ஆவின் நிறுவன உள்கட்டமைப்பு வசதி கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதனால், நாள்தோறும் 35 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இதை, நாள் ஒன்றுக்கு 50 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அவர் பேசினார்.

இவ்விழாவில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய நிர்வாக குழு தலைவர் சந்திரன், பூந்தமல்லி மற்றும் திருத் தணி எம்.எல்.ஏ.க்கள் மணிமாறன், அருண்சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்