முதல்கட்ட கலந்தாய்வு முடிந்தது: அரசு, தனியார் மருத்துவ கல்லூரி அனைத்து இடங்களும் நிரம்பின- 544 பழைய மாணவர்களுக்கு இடம்

By செய்திப்பிரிவு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான 7-ம் நாள் கலந்தாய்வு, சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 348 மாணவர்கள் பங்கேற்றனர்.

கலந்தாய்வு முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக இருந்த 84 எம்பிபிஎஸ் இடங்கள், தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளில் 114 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 16 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 214 இடங்கள் நிரப்பப்பட்டன.

கடந்த 9-ம் தேதி முதல் நேற்று வரை நடந்த கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,257 எம்பிபிஎஸ் இடங்கள், 8 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளில் 597 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 2,939 இடங்கள் நிரப்பப்பட்டன.

பழைய மாணவர்கள் 544 பேர் கல்லூரிகளில் தங்களுக் கான இடங்களை தேர்வு செய்தனர். நீதிமன்றம் தடை விதித்து இருப்பதால் மாண வர்கள் யாருக்கும் கல்லூரிகளில் சேருவதற்கான அனுமதிக் கடிதம் வழங்கப்படவில்லை.

2-ம்கட்ட கலந்தாய்வு

இரண்டாம்கட்ட கலந்தாய்வை ஜூலை 3-வது வாரத்தில் நடத்த மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) திட்டமிட்டுள்ளது. இந்த கலந்தாய்வில் தனியார் (சுயநிதி) பல் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கான 1,000-க்கும் மேற்பட்ட பிடிஎஸ் இடங்கள், பொறியியல் படிக்கப்போகும் மாணவர்கள் ஒப்படைக்கும் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்