தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் உத்தரவு அமலுக்கு வர இன்னும் ஒருவாரம் மட்டுமே உள்ள நிலையில், ஹெல்மெட் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் ஹெல்மெட் தட்டுப்பாடு ஏற்பட்டு ள்ளது.
கட்டாய சட்டம்
விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று 1985-ம் ஆண்டு தமிழகஅரசு உத்தரவிட்டது. அதன்பின், 1988-ல் வெளியான மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்திலும் ஹெல்மெட் கட்டாயம் என்று வலியுறுத்தப்பட்டது.
ஆனால், இதை அமல்படுத்து வதில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டவில்லை. அவ்வ ப்போது நீதிமன்றங்கள் தலை யிட்டு, ஹெல்மெட் கட்டாயம் என உத்தரவுகளை பிறப்பிக்கும். ஒன்றிரண்டு மாதங்கள் மட்டும் வாகன ஓட்டிகளை போலீஸார் எச்சரிப்பதும், அபராதம் வசூலிப் பதும் நடக்கும். அதன்பிறகு மறந்துவிடுவர்.
இந்நிலையில், விபத்து இழப்பீடு தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.
தமிழக அரசு உத்தரவு
அதன் அடிப்படையில் தமிழகத் தில் ஜூலை 1-ம் தேதி முதல் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயமாக ஹெல் மெட் அணிய வேண்டும். வாகனத்தை ஓட்டுபவர் மட்டு மின்றி, பயணிப்பவரும் ஹெல் மெட் அணிய வேண்டும். தவறும்பட்சத்தில் வாகனத்தின் அனைத்து ஆவணங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்படும். ஐஎஸ்ஐ சான்று பெற்ற புதிய ஹெல்மெட் மற்றும் அதை வாங்கியதற்கான ரசீது ஆகியவற்றை காட்டினால் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் திருப்பித் தரப்படும் என, தமிழக அரசு கடந்த 17-ம் தேதி உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் ஹெல்மெட் அணி வதன் அவசியத்தை வலியுறுத்தி காவல்துறை மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
விற்பனை அதிகரிப்பு
முன்பு எப்போதும் இல்லாத அளவில் இந்த முறை கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி அதில் பயணிப்போரும் ஜூலை 1-ம் தேதிக்கு பிறகு கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கடந்த சில தினங்களாக ஹெல்மெட் விற்பனை கடுமையாக அதிகரித்துள்ளது.
கடுமையான தட்டுப்பாடு
ஒரே நேரத்தில் மாநிலம் முழுவதும் அதிகமான எண்ணிக்கையில் ஹெல்மெட் தேவைப்படுவதால் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை நிறுவன உரிமையாளர் மாலைசூடி பி.எம். பால்ராஜ் கூறும்போது, ‘தமிழகம் முழுவதும் சுமார் 3 கோடி ஹெல்மேட் தேவை என கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் டெல்லி, மும்பை, டெராடூன் உள்ளிட்ட இடங்களில் ஐஎஸ்ஐ தரச்சான்று பெற்ற 6 முன்னணி ஹெல்மெட் தயாரி ப்பு நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் தினமும் 250 ஹெல்மெட் அளவுக்கு தான் தயாராகின்றன. இந்நிறுவனங் களின் குடோன்களில் கையிருப்பில் இருந்த அனைத்து ஹெல்மெட்டுகளும் காலியாகிவிட்டன. இனி புதிதாக தயாரித்து தான் வரவேண்டியுள்ளது.
அவகாசம் வேண்டும்
எங்கள் கடையில் தினமும் சரசாரியாக 25 ஹெல்மெட் விற்பனையாகும். தமிழக அரசின் உத்தரவுக்கு பின் தினமும் 500 ஹெல்மெட் வரை விற்பனையாகின்றன. ஆனால், தயாரிப்பு நிறுவனங்கள் போதுமான ஹெல்மெட் சப்ளை செய்வதில்லை.
ஒரு கண்டெய்னர் ஹெல்மெட் கேட்டு முன்பணம் செலுத்தியிருந்தேன். ஒரு கண்டெய்னரில் 2,800 ஹெல்மெட் வரும். ஆனால், தயாரிப்பு நிறுவனமோ வெறும் 360 ஹெல்மெட்டை மட்டுமே அனுப்பியுள்ளது.
எனவே, ஜூலை 1-ம் தேதிக்குள் அனைவருக்கும் ஹெல்மெட் கிடைத்துவிடுமா என்பது சந்தேகம் தான். கட்டாய ஹெல்மெட் உத்தரவை அமல்படுத்த ஜூலை 15-ம் தேதி வரை அவகாசம் கொடுத்தால் வசதியாக இருக்கும்.
விலை உயர வாய்ப்பு
ஹெல்மெட்டை பொறுத்தவரை ஐஎஸ்ஐ தரச்சான்று பெற்றவை குறைந்தபட்சம் ரூ.550 முதல் அதிகபட்சம் ரூ.2700 வரை கிடைக்கின்றன. மக்கள் தரமான ஹெல்மெட்டுகளையே விரும்பி கேட்கின்றனர்’ என்றார் அவர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
15 hours ago