பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை பள்ளி விடுதிகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

By செய்திப்பிரிவு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை யின் பள்ளி விடுதிகளில் சேர நாளைக்குள் விண்ணப்பிக்க வேண் டும் என மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் நலத்துறை சார்பில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை யினர் மற்றும் சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்காக மாவட்டம் முழுவதும் 27 விடுதிகள் இயங்கி வருகின்றன. இந்த விடுதிகளில், பட்டப்படிப்பு, பட்ட மேல்படிப்பு மற்றும் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்கள் விடுதியில் சேர தகுதியுடையவர்கள்.

விடுதிகளில் தங்கும் மாணவர் களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதி, 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு 4 ஜோடி பாலியெஸ்டர் காட்டன் சீருடைகள் வழங்கப்படுகின்றன. இந்த விடுதி களில் சேர மாணவ, மாணவியர் களின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இருப்பிடத்துக்கும், கல்வி நிலையத் துக்கும் உள்ள தொலைவு கட்டாயம் 8 கி.மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தொலைவு விதி மாணவியருக்கு பொருந்தாது.

சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலு வலகத்தில், மாணவர்கள் இலவச மாக விண்ணப்பங்களை பெறலாம். பள்ளி விடுதிகளுக்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நாளைக்குள்ளும், கல்லூரி விடுதி களுக்கான விண்ணப்பங்களை வரும் ஜூலை மாதம் 15-ம் தேதிக்குள்ளும் மாவட்ட பிற் படுத்தப்பட்ட அலுவலரிடம் வழங்க வேண்டும் என மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் மனோகரன் தெரிவித்து உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

46 mins ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்