நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. அதே நேரத்தில் விமர்சனம் செய்யும்போது வார்தைகளை கவனமாக கையாள வேண்டும் என வழக்கு ஒன்றில் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
தமிழகத்தில் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத அரசு அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கவும், நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவுகள் குறித்து ஊடகங்களில் விமர்சனம் செய்ய தடை விதிக்கவும் உத்தரவிடக்கோரி மதுரை பொதுநல வழக்கு மையத்தின் மேலாண்மை அறங்காவலர் கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எஸ்.மணிக்குமார் ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று விசாரித்து பிறப்பித்த உத்தரவு:
அதிகாரிகள் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யும்போது கவனமாக செயல்பட்டு ஆய்வு செய்த பிறகே தாக்கல் செய்ய வேண்டும். மனுவில் தவறான தகவல் தெரிவிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொறுத்தவரை, வழக்கின் தன்மையை பொறுத்துதான் நடவடிக்கை எடுக்க முடியும்.
தவறு செய்த அதிகாரிகளை மட்டுமே தண்டிக்க சட்டத்தில் இடம் உண்டு. நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சனம் செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. விமர்சனம் செய்யும்போது வார்த்தைகளை கவனமாகக் கையாள வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள் ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago