தமிழகத்தில் வரவேற்பை பெறும் ஜார்க்கண்ட் மாநில பட்டு ரகங்கள்: கோடையில் ரூ 1.6 கோடி வருவாய் ஈட்டிய கோ-ஆப்டெக்ஸ்

By செய்திப்பிரிவு

கோ-ஆப்டெக்ஸ் கோடை கண்காட்சியில் ஜார்க்கண்ட் மாநில டசரா பட்டுக்கு நல்ல அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. டசரா பட்டு போன்ற புதிய வரவுகளால் கோ- ஆப்டெக்ஸ் கோடை சிறப்பு கண்காட்சியில் இதுவரை ரூ.1.6 கோடி அளவுக்கு வருவாய் வந்துள்ளது.

இது தொடர்பாக கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் டி.என். வெங்கடேஷ் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

தமிழக நெசவாளர்கள் நெய்யும் பட்டுத்துணிகளை வெளியூர்களில் பிரபலப்படுத்த பல்வேறு முயற்சி களை எடுத்து வருகிறோம். மொத்த முள்ள 200 கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்களில், 70 விற் பனையகங்கள் வெளி மாநிலங் களில் உள்ளன. வழக்கமாக கோடையில் விற்பனை பெரியளவில் இருக்காது. பண்டிகை காலங்களில்தான் விற்பனை அதிகமிருக்கும்.

கோடையை முன்னிட்டு தஞ்சாவூர், சேலம், மதுரை, திருச்சி, ஆகிய ஊர்களில் கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு கண்காட்சிகள் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கப்பட்டது. அந்த கண்காட்சி ஜுலை 15-ம் தேதி வரை நடக்கவுள்ளது. அதில் ‘கூல் காட்டன்’ எனப்படும் புதிய வகை பருத்தி சேலைகள் மற்றும் துணிகளுக்கு பொதுமக்களி டையே நல்ல அளவில் வரவேற்பு உள்ளது. இதுவரை 6 ஆயிரத்து 161 கூல் காட்டன் வகைகள் விற்பனை ஆகியுள்ளன.

கடந்தாண்டு கோடையில் ரூ.40 லட்சம் அளவில் கோ-ஆப்டெக்ஸ் பொருட்கள் விற்பனை ஆகியிருந் தன. இந்த வருடத்தில் இதுவரை ரூ.1.6 கோடிக்கு விற்பனை ஆகியுள் ளது. கோடை கண்காட்சிகள் ஜுலை 15-ல் முடியும்போது இது ரூ.2 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஜார்க்கண்ட் கிராப்ட் சேல்ஸ் நிறுவனத்துடன் சமீபத்தில் புரிந் துணர்வு ஒப்பந்தம் கையெழுத் திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், தமிழக நெசவாளர் கள் தயாரிக்கும் பொருட்கள் ஜார்க் கண்டிலும், ஜார்க்கண்ட் மாநில நெசவாளர்கள் நெய்த டசரா பட்டுகள் தமிழகத்திலும் விற்பனை செய்யப்படுகின்றன. ஐடி நிறு வனங்களில் பணியாற்றும் வட இந்திய பெண்கள் டசரா பட்டினை விரும்பி வாங்குகிறார்கள். இது தவிர இயற்கையாக உருவாக்கப் படுகிற ஆர்கானிக் புடவைகளும் பெரியளவில் விரும்பப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

43 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்