மருத்துவ படிப்பு கலந்தாய்வில் ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதை ஏன் நிறுத்தி வைக்கக்கூடாது? - அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

By செய்திப்பிரிவு

மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் ஒதுக்கீட்டு ஆணை வழங்கு வதை ஏன் நிறுத்தி வைக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

எம்பிபிஎஸ்., பிடிஎஸ் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர் வதற்கான முதல்கட்ட கலந்தாய்வு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் இன்று நடை பெறுகிறது. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் 200-க்கு 200 மதிப் பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைவாக உள்ளது. இத னால், மருத்துவ படிப்பில் சேருவதற்கு கடந்தாண்டு 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் அதிக எண்ணிக் கையில் கலந்தாய்வில் கலந்து கொள்ள உள்ளனர். எனவே இந்த ஆண்டு பிளஸ் டூ முடித்த மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே மருத்துவ படிப்பில் சேரும் நிலை ஏற்பட் டுள்ளது.

இதை எதிர்த்து உயர் நீதிமன் றத்தில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது தொடர் பாக அவர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்தாண்டு பிளஸ் 2 தேர் வில், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் முறையே 2710, 1693, 652 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றனர். இந்தாண்டு பிளஸ் 2 தேர்வில், இயற்பியல் வினாத் தாள் கடினமாக இருந்ததால் 124 பேர் மட்டுமே 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

இந்தாண்டு இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங் களில் முறையே 124, 1049, 387 மாணவர்கள் மட்டுமே 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள். மருத்துவ படிப்புக்கான மொத்த இடங்கள் 2808. ஆனால், கடந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்ற 4,679 பேர் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். எனவே, இந்தாண்டு நடத்தப்படும் மருத் துவ படிப்பு கலந்தாய்வில் கடந் தாண்டு மாணவர்கள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட் டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் இந்த வழக்கை விசாரித்து, “மருந்துவ படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பழைய மாண வர்கள் கலந்துகொள்வது இந்த வழக்கின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டதாகும்” என்று உத்தர விட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு செய்தனர். இந்த மனு, நீதிபதிகள் சதீஷ் அக்னி கோத்ரி, வேணுகோபால் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் ஆஜராகி, இவ்வழக்கில் மருத் துவ படிப்பு மாணவர் சேர்க் கைக்கான கலந்தாய்வுக்கு தடை விதித்தால் ஏராளமான பிரச்சினைகளும், குழப்பமும் ஏற்படும். எனவே, தடை விதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடத்தினாலும், ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதை ஏன் நிறுத்தி வைக்கக்கூடாது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு இந்த விவகாரத்தில் அரசின் நிலை குறித்து கேட்டு வெள்ளிக்கிழமை தெரிவிப் பதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை வெள்ளிக் கிழமைக்கு ஒத்திவைத்து நீதி பதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்