சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி மழைநீர் கால்வாய் உடைப்பு கோஷ்டி மோதல் உருவாகும் சூழல்: வட்டார வளர்ச்சி அலுவலர் முற்றுகை

அய்யம்பேட்டை ஊராட்சி பகுதி மழைநீர் கால்வாயில், கழிவுநீர் வெளியேற்றப்படுவதாகவும், அதனால் சுகாதாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் கூறி அந்த கால்வாயை சிலர் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. சமாதான பேச்சுவார்த்தை நடத்திய வட்டார வளர்ச்சி அலுவலர் முற்றுகையிடப்பட்டதோடு, சாலை மறியல்களும் நடந்ததால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட அய்யம்பேட்டை ஊராட் சியில், சாலைகளில் மழைநீர் தேங்குவதை தடுப்பதற்காக ஊராட்சி நிர்வாகத்தால் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப் பட்டுள்ளது. இந்த கால்வாய்களில் வீடுகளின் கழிவுநீரும் வெளியேற் றப்படுவதாக புகார் கூறப்படுகிறது.

இந்நிலையில், அம்பேத்கர் காலனி பகுதிவாசிகள் கால்வாயை நேற்று முன்தினம் இரவு மண்ணை கொட்டி அடைத்ததாக கூறப் படுகிறது. இதனால், கால்வாயில் சென்ற கழிவுநீர் அய்யம்பேட்டை பகுதியில் உள்ள தெருக்களில் வழிந்தோடி கடும் துர்நாற்றம் வீசியது. இதனால், இருதரப் பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

தகவல் அறிந்த வாலாஜாபாத் போலீஸார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா ஆகியோர் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், கால்வாயை வேறு பகுதியில் கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி அம்பேத்கர் காலனி பகுதிவாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு காணமுடியாமல் போலீஸார் மற்றும் அதிகாரிகள் திரும்பி சென்றனர். அப்பகுதியில் பதற்ற மான சூழல் நிலவுகிறது.

இதுகுறித்து, அம்பேத்கர் காலனி பகுதிவாசிகள் கூறியதா வது: கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதனால், கால்வாயை வேறு பகுதியாக கொண்டு செல்ல வலியுறுத்தி வருகிறோம் என்றனர்.

வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா கூறியதாவது: கருக்குப்பேட்டையில் கால்வாய் செல்லும் பகுதிகளில் ஆக்கிரமிப் புகள் அதிகரித்து கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கால்வாய்களில் கழிவுநீர் தேங்கி நிற்கின்றன.

அய்யம்பேட்டை ஊராட்சியில் அரசியல் லாபத்துக்காக ஒருசில அரசியல் பிரமுகர்கள் இவ்வாறான மோதல்களை தூண்டி விட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாகவே கால்வாய் அடைக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் காலனி பகுதி வாசிகள், காய்வாயை அப்பகுதியில் உள்ள நீர்நிலை ஒன்றில் இணைக்குமாறு வலியுறுத்துகின்றனர்.

இதை செய்தால், அப்பகுதியில் பிரச்சினை அதிகரிக்குமே தவிர தீர்வு கிடைக்காது. இரு தரப்பினரி டையே மோதல் ஏற்படும் சூழல் உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்