கோவை சிறையில் மேலும் ஒரு கைதி இறந்ததாக பெரும் பரபரப்பு

கோவை மத்திய சிறையில் மேலும் ஒரு கைதி உயிரிழந்ததாக பரவிய தகவலைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் சிறை முன்பு நேற்று திரண்டனர்.

வேலூர் மாவட்டம், குடியாத் தத்தைச் சேர்ந்தவர் மு.ஐயப்பன். கடந்த 2010-ம் ஆண்டு, அதே பகுதியில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர், சிறை நிர்வாகக் காரணங்களுக்காக கோவை மத்திய சிறைக்கு, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாற்றப்பட்டார்.

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த மேட்டுப்பாளையம் ஆலூரைச் சேர்ந்த கருப்புசாமி, நேற்று முன்தினம் மர்மமாக உயிரிழந்தார். இதையடுத்து, சிறையில் அடைக் கப்பட்டுள்ள ஐயப்பனும் உயிரிழந்ததாக அவரது குடும்பத்துக்கு நேற்று தகவல் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது மனைவி சசிகலா, இரு கைக் குழந்தைகள் மற்றும் உறவினர்கள் என சுமார் 10 பேர் கோவை அரசு மருத்துவமனையில் நேற்று காலை திரண்டனர்.

ஐயப்பனின் சடலத்தை பார்க்க வேண்டும் என தெரிவித்ததால் மருத்துவமனை ஊழியர்கள் குழப்பமடைந்தனர். அந்தப் பெயரில் சிறையில் இருந்து பிரேதப் பரிசோதனைக்காக எந்த சடலமும் வரவில்லை, மத்திய சிறையில் இருந்த கருப்புசாமி என்பவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, கோவை மத்திய சிறை முன்பாக உறவினர்கள் கூடினர்.

கைதி ஐயப்பனை பார்க்க வேண்டும் என அவரது மனைவி, சிறை நுழைவு வாயிலில் இருந்த காவலர்களிடம் தெரிவித்தார். இருப்பினும், சிறை விதிகளின்படி நேற்று வழக்கறிஞர்கள் மட்டுமே பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டதால் சிறை முன்பாக அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

ஐயப்பன் உயிரிழக்கவில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்துவதற்காக சசிகலாவை மட்டும் உள்ளே அனுமதிக்க சிறை அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து, அவரும், இரு குழந்தை கள் மட்டும் ஐயப்பனை பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், சிறையில் இருந்து வெளியே வந்த அவரது மனைவி, ஐயப்பனின் வலது காலில் காயங்கள் இருந்ததால், அவர் ஒரு காலை மட்டும் ஊன்றி வந்ததாகவும், எதையும் பேச வில்லை எனவும், பயத்தில் இருந்ததாகவும் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 secs ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்