செப்.2 முதல் நடக்கும் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாக மாநில, மாவட்ட மாநாடுகள்: தொழிற்சங்க அமைப்புகள் முடிவு

மத்திய அரசைக் கண்டித்து செப்டம்பர் 2 முதல் நடத்தப்படவுள்ள நாடுதழுவிய வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து மாநில, மாவட்ட மாநாடுகள் நடத்த தொழிற்சங்க அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

இதுதொடர்பாக சென்னையில் தொழிற்சங்க அமைப்புகள் நேற்று கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய தொழிற்சங்க அமைப்புகளின் கூட்டம் எச்எம்எஸ் தேசிய தலைவர் க.அ.ராஜா தர் தலைமையில் சென்னையில் கடந்த 8-ம் தேதி நடந்தது. இதில் மு.சண்முகம் (எல்பிஎப்), ஜி.பி.சரவணபவன் (பிஎம்எஸ்), ஆதிகேசவன் மற்றும் எம்.பன்னீர்செல்வம் (ஐஎன்டியுசி), டி.எம்.மூர்த்தி மற்றும் எஸ்.குப்பன் (ஏஐடியுசி) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மத்திய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளைக் கண்டித்தும், 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தும் செப்டம்பர் 2 முதல் நாடுதழுவிய வேலைநிறுத்தம் செய்யுமாறு டெல்லியில் நடந்த தேசிய தொழிலாளர்கள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் வேலைநிறுத்தம் செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக, ஜூலை 7-ல் திருச்சியில் மாவட்டத் தலைவர்கள் மாநாடு, ஜூலை 3-வது வாரத்தில் சென்னையில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு, ஜூலை, ஆகஸ்ட்டில் மாவட்ட வாரியாக வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்படும்.

நிர்வாகங்களுக்கு வேலை நிறுத்த முன்னறிவிப்பு நோட்டீஸ் ஆகஸ்ட் 14-ல் அனுப்பிவைக்கப்படும். ஆகஸ்ட் 24 முதல் 30 வரை அனைத்து ஆலை வாயில்கள் முன்பு கூட்டங்கள், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்