தமிழகத்தில் 140 இடங்களில் ஹெல்மெட் சோதனை: அதிகாரிகளுக்கு போக்குவரத்து ஆணையரகம் உத்தரவு

By கி.ஜெயப்பிரகாஷ்

தமிழகம் முழுவதும் 140 இடங்களில் வரும் 1-ம் தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வது தொடர்பாக சோதனை நடத்துமாறு ஆர்டிஓக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சோதனை தொடர்பாக தினமும் அறிக்கை அனுப்பவும் போக்கு வரத்து ஆணையரகம் தெரிவித் துள்ளது.

தமிழகத்தில் ஜூலை 1-ம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. தவறும்பட்சத்தில் மோட்டார் வாகன சட்டம் 1988, பிரிவு 206-ன் கீழ், வாகன ஓட்டியின் ஓட்டுநர் உரிமம் உட்பட இருசக்கர வாகனத்தின் அனைத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்துள்ளது. இதையடுத்து, வாகன ஓட்டிகள் ஹெல்மெட் வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டி வருவோர் மீது சட்டப்படி நட வடிக்கை எடுக்கப்படும் என காவல்த்துறை எச்சரிக்கை விடுத் துள்ளது.

இதற்கிடையே, போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறிய தாவது:

உயர் நீதிமன்ற உத்தரவின்படிம் ஜூலை 1-ம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.

மேலும், மாநிலம் முழுவதும் மொத்தம் 140 இடங்களில் வரும் 1-ம் தேதி முதல் ஹெல்மெட் சோதனை நடத்த வேண்டும் என ஆர்டிஓக்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். சென்னை யில் மட்டும் 19 இடங்களில் சோதனை நடக்கவுள்ளது.

அதன்படி, 80 ஆர்டிஓ அலு வலகங்கள், 60 யூனிட் அலுவல கங்களுக்கு அவற்றின் எல்லைக் குட்பட்ட இடங்கள் பிரித்து அளிக்கப்பட்டுள்ளன. காலை மற்றும் மாலை நேரங்களில் குறைந்தது தலா ஒரு மணி நேரம் சோதனை நடத்த வேண்டும். ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளிடம் ஆவணங்களை பறிமுதல் செய்ய வேண்டும்.

ஐஎஸ்ஐ தரச்சான்று பெற்ற புதிய ஹெல்மெட் மற்றும் அதனை வாங்கியதற்கான ரசீது ஆகியவற்றை சமர்ப்பிக்கும் பட்சத்தில்தான் பறிமுதல் செய்யப் பட்ட ஆவணங்கள் திரும்ப அளிக்க வேண்டும் என உத்தர விட்டுள்ளோம். ஹெல்மெட் சோதனை குறித்து தினமும் போக்கு வரத்து ஆணையரகத்துக்கு அறிக்கை தயாரித்து அனுப்பவும் அறிவுறுத்தியுள்ளோம்.

அபராதம் விதிக்க முடிவு?

ஜூலை 1-ம் தேதி முதல் ஹெல்மெட் அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தொடக்கத்தில் ஆவணங்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்படும். வாகன ஓட்டிகள் தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் வந்தால், அடுத்த 2 வாரங்களில் அபராதம் விதிக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்