கொலையில் தொடர்பில்லாத 4 பேர் கைது விவகாரம்: தூத்துக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் - நெல்லை டிஐஜி முருகன் உத்தரவு

தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் செல்வம். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியபோது, தட்டப்பாறை காவல் நிலைய பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார்.

தட்டப்பாறை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வர்த்தக ரெட்டிபட்டியில் 2013-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி ரியல் எஸ்டேட் அதிபர் அந்தோணி பாண்டியன், அவரது நண்பர் ஷியாம்ராஜ் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.

இந்த கொலை வழக்கை விசா ரித்த இன்ஸ்பெக்டர் செல்வம், கொலை தொடர்பாக வங்கி காசாளர் ஏசுராஜன், வரதராஜன், பரமசிவன், சுடலைமுத்து ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தார்.

“கொலை நடந்த நேரத்தில் நாங்கள் வெவ்வேறு இடங்களில் பணியில் இருந்தோம். போலீஸார் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யாமல், வழக்குக்கு தொடர்பில்லாத எங்களை உள் நோக்கத்தோடு கைது செய்துள்ள னர்” என்று கூறி ஏசுராஜன் உள் ளிட்ட 4 பேரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

12 பேருக்கு தொடர்பு

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கை மறு விசா ரணை செய்யும்படி உத்தரவிட்டது. அதன்பேரில் தட்டப்பாறை இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்ற பெலிக்ஸ் சுரேஸ் பீட்டர் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

இந்த விசாரணையில் ஏசுதாசன் உள்ளிட்ட 4 பேரும் குற்றவாளிகள் இல்லை. இரட்டை கொலைக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரியவந்தது. 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இக்கொலை வழக்கில் வர்த்தக ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த 12 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதில் 4 பேர் கைது செய் யப்பட்டனர். 6 பேர் நீதிமன்றங் களில் சரணடைந்தனர். 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

பணியிடை நீக்கம்

கொலையில் சம்பந்தமில்லாத 4 பேரை கைது செய்தது தொடர்பாக இன்ஸ்பெக்டர் செல்வம் மீது நடவடிக்கை எடுக்குமாறு, திருநெல்வேலி சரக டிஐஜி முருகனுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் பரிந்துரை செய்தார். அதன்பேரில் ஆய்வாளர் செல்வத்தை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி உத்தரவிட்டார்.

சமீபத்தில் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்திலிருந்து நாசரேத் காவல் நிலையத்துக்கு இன்ஸ்பெக்டர் செல்வம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால், உயர் நீதிமன்றம் சென்று இடைக்காலத் தடை உத்தரவு வாங்கிய செல்வம், தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளார். இந்நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்