மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர் மேலும் ஒரு வழக்கில் கைது: ஜூலை 2 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

கோவை கருமத்தம்பட்டி பகுதியில் கடந்த மே மாதம் 5-ம் தேதி மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த ரூபேஸ், இவரது மனைவி சைனா, கண்ணன், அனூப், வீரமணி ஆகிய 5 பேரை கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசார ணையின் தொடர்ச்சியாக, பொள் ளாச்சி பகுதியைச் சேர்ந்த கணபதி, செல்வராஜ், சிகாமணி ஆகிய மூன்று பேரை ஆழியாறு நகர் போலீஸார் அண்மையில் கைது செய்தனர். மாவோயிஸ்ட் இயக்கத்துக்கு ஆள்சேர்ப்பில் ஈடுபட்டதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் கைதானவர் களிடம் நடத்திய விசாரணையில், பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரை மாவோயிஸ்ட் இயக்கத்தில் கண் ணன் சேர்த்துவிட்டது தெரியவந்த தாம்.

இதையடுத்து, அந்த இயக் கத்துக்கு ஆள்சேர்ப்பு நடவடிக்கை யில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கண்ணனை, பொள்ளாச்சி ஆழியாறு நகர் போலீ ஸார் நேற்று கைது செய்தனர். அவர் மீது சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம், தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள் சேர்த்தது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

கோவை மத்திய சிறையில் இருந்து அவரை அழைத்துச் சென்று, மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் போலீஸார் ஆஜர் படுத்தினர்.

அவரை, ஜூலை 2-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

பொள்ளாச்சி அங்கலக்குறிச்சி யைச் சேர்ந்த சந்தோஷ்குமார், கடந்த ஆண்டு மாயமானது தொடர்பாக ஆழியாறு நகர் போலீ ஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கு விசாரணையின்போது அவர் மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்க்கப்பட்டிருப்பது தெரிய வந்த தாக போலீஸார் தெரிவிக்கின் றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்