பாலியல் பலாத்காரம் செய்தவரே பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்ததால் விடுதலை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

விழுப்புரம் மாவட்டம், காக்களூ ரைச் சேர்ந்தவர் மனோகரன். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்ணை காதலித்துள்ளார். இரு வருக்குமிடையே உடல்ரீதியான உறவும் இருந்துள்ளது. இந்நிலை யில் மனோகரன் வீட்டில் அவர்களின் திருமணத்துக்கு எதிர்ப்புக் கிளம்பி யது. அதையடுத்து மனோகரன், அவரது பெற்றோர் முருகையன், சின்னப்பொண்ணு, முன்னாள் ஊர் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்து, மனோகரனுக்கு 10 ஆண்டுகளும், அவரது பெற்றோர் மற்றும் முன்னாள் ஊர் தலைவர் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து 2009-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து நான்கு பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இவ்வழக்கில் மனோகரனின் வழக்கறிஞர் வாதிடும்போது, “மனோ கரன் தன்னுடன் பழகிய பெண் ணையே 2011-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், மனோகரனை சிறையில் வைத்திருப்பது அவர்களைப் பிரிப் பது போலாகும். எனவே, அவரை விடுதலை செய்ய வேண்டும்” என்று கோரினார்.

மனோகரனின் மனைவி நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு வில், “என்னையும், குழந்தையை யும் கணவர் நன்றாக கவனித்துக் கொள்கிறார். நாங்கள் மகிழ்ச்சி யாக இருக்கிறோம்” என்று குறிப் பிட்டிருந்தார்.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தேவதாஸ் பிறப் பித்த உத்தரவில் கூறியிருப்ப தாவது:

இவ்வழக்கில் தண்டனை பெற்ற மனோகரனை மன்னித்து கணவராக ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதாக அந்தப் பெண் கூறியுள் ளார். இந்நிலையில், மனைவி மற்றும் குழந்தையின் மகிழ்ச்சியை பாதிக்கும் வகையில் மனோகரனை சிறைக்கு அனுப்புவதால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை.

இவ்வழக்கைப் பொறுத்தவரை மனோகரன் அனுபவித்த சிறை தண்டனையே போதுமானது. அதனால் அவருக்கான தண்டனை குறைக்கப்படுகிறது. அவரது பெற்றோர் மற்றும் சுப்பிரமணியனை விடுதலை செய்கிறேன்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில், மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை சமீபத்தில் விசாரித்த நீதிபதி தேவதாஸ், சம்பந்தப்பட்ட இருவரும் சமரச மையத்துக்குப் போய் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்று உத்தரவிட்டார். இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது.

அதையடுத்து ஈரோடு மாவட்டத்தில், ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றம் வழங்கிய 10 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து நீதிபதி தேவதாஸ் உத்தர விட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

41 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்