வினாத்தாள் அவுட் வழக்கு: கைதான ஆசிரியர் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் அனுமதி

By எஸ்.கே.ரமேஷ்

வாட்ஸ் அப் மூலம் வினாத்தாள் வெளியான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட உடற்கல்வி ஆசிரியருக்கு நீதிமன்றம் செல்லும் வழியில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆசிரியருக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு சந்தேகத்தை எழுப்புவதாக போலீஸார் தெரிவித்தனர்.

வாட்ஸ் அப் சம்பவத்தில் இவர் 10-வது குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ள டிஇஓ வேதகண்தன்ராஜ், தற்போது தினமும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் கையெழுத்திட்டு வருவதாகவும்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தனியார் பள்ளியில் கடந்த மார்ச் மாதம் 18-ம் தேதி நடந்த பிளஸ் 2 கணித தேர்வின் போது, அறை கண்காணிப்பாளராக சென்ற தனியார் பள்ளி ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன் ஆகிய இருவரும் செல்போன் மூலம் வினாத்தாளை படம் எடுத்து அதனை வாட்ஸ் அப் மூலம் சக ஆசிரியர்களான உதயக்குமார், கார்த்திகேயன் ஆகியோருக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை சிஇஓ பொன்குமார் தலைமையிலான பறக்கும்படையினர் ஆய்வின் போது கண்டுபிடித்தனர். இது குறித்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, இவ்வழக்கில் மகேந்திரன், கார்த்திக்கேயன், கோவிந்தன், உதயகுமார், மைக்கேல்ராஜ், விமல்ராஜ், சஞ்சீவ் என்ற சஞ்சீவ்குமார், கவிதா ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

இச்சம்பவத்தில் அப்போதைய ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர் வேதகண்தன்ராஜ், புக்கசாகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர் மாது மற்றும் மாவட்ட கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் உட்பட 5 பேரை அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட 5 பேரிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். இதில் டிஇஓ வேதகன்தன்ராஜ், உடற்கல்வி ஆசிரியர் மாது ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். இதில் டிஇஓவிற்கு ஜாமீன் கிடைத்தது.

தொடர்ந்து தலைமறைவாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் மாது, நேற்று கிருஷ்ணகிரி சிஇஓ அலுவலகத்திற்கு வந்தார். தகவலறிந்த குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீஸார் மாதுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்க மாதுவை போலீஸார் அழைத்து சென்றபோது, அவருக்கு திடீர் என உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு, இருதயம் வலிப்பதாக போலீஸாரிடம் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து அவரை போலீஸார் சிகிச்சைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். வாட்ஸ் அப் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மாது, திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக நடிக்கிறாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

வாட்ஸ் அப் சம்பவத்தில் இவர் 10வது குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ள டிஇஓ வேதகண்தன்ராஜ், தற்போது தினமும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுலகத்தில் கையெழுத்திட்ட வருவதாகவும், சென்னைக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள செல்போன்கள், ஆய்வு அறிக்கை பின் மேலும் பலர் கைதாக கூடும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்