ஆர்.கே.நகரில் பிரச்சாரம் இன்று ஓய்கிறது: இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அமைச்சர்கள், அதிமுகவினர் தீவிரம்

By செய்திப்பிரிவு

ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. இதனால், இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அமைச்சர்களும் அதிமுகவினரும் தீவிரமாக ஈடு பட்டுள்ளனர்.

சென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவை தொகுதிக்கு நாளை மறுநாள் (27-ம் தேதி) இடைத் தேர்தல் நடக்கிறது. அதிமுக வேட்பாளராக முதல்வர் ஜெய லலிதா போட்டியிடுகிறார். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சி.மகேந்திரன், சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி உள்ளிட்ட 28 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதல்வர் ஜெயலலிதா, கடந்த 22-ம் தேதி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், வாக்குப்பதிவுக் கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் துறை செய்து வருகிறது. இத்தொகுதியில் 230 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பணியாற்றும் 1,205 வாக்குச் சாவடி அலுவலர்களுக்கும் 3 கட்டமாக தேர்தல் அதிகாரிகள் பயிற்சி அளித்துள்ளனர்.

தொகுதியில் உள்ள 2.43 லட்சம் வாக்காளர்களுக்கும், வாக்குச்சாவடி அமைவிடம் குறித்த வரைபடத்துடன் கூடிய ‘பூத் சிலிப்’ வழங்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு பணிக்காக நேற்று வரை 10 கம்பெனி, அதாவது 1.400-க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படையினர் வந்துள்ளனர். இதுதவிர சென்னை போலீஸார் 987 பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதையடுத்து அத்தொகுதியில் தங்கியுள்ள வெளியாட்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மதுக்கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரச்சாரம் ஓய்வதையடுத்து அதிமுகவினர் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட் டுள்ளனர். பிரச்சாரத்தின்போது பேசிய முதல்வர் ஜெயலலிதா, ‘மகத்தான வெற்றியே எனது லட்சியம்’ என கூறினார். அதை மனதில் வைத்து அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக் கள், கட்சி நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

அதேபோல, இந்திய கம் யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந் திரனும் அவருக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகி கள், தொண்டர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சுயேச்சை வேட்பாளர் டிராஃபிக் ராமசாமியும் பிரச்சாரத்தில் ஈடு பட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்