பேரறிவாளனுக்கு சிறுநீரக தொற்று பாதிப்பு இல்லை: மருத்துவ பரிசோதனையில் தகவல்

பேரறிவாளனுக்கு சிறுநீரக தொற்று பாதிப்பு இல்லை என்று மருத் துவ பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூர் சிறை யில் அடைக்கப்பட்டிருந்த பேரறி வாளன், உயர் ரத்தஅழுத்தம், முதுகுவலி, சிறுநீரக தொற்று போன்றவற்றால் பாதிக்கப்பட்டார். 5 மாதத்துக்கு முன்பு வேலூர் அடுக் கம்பாறை அரசு மருத்துவமனை யில் அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டது. ஆனாலும், பாதிப்பு குறை யாததால் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப் பட்டது.

இதற்காக, அவர் புழல் சிறைக்கு சமீபத்தில் மாற்றப்பட்டார். கடந்த 8-ம் தேதி ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு சிறுநீரக தொற்று பரிசோதனை யும், முழு உடல் பரிசோதனை யும் செய்யப்பட்டன. பரிசோதனை யின் முடிவில்தான் அவர் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட வேண்டுமா அல்லது புறநோயாளி யாக இருக்கலாமா என்று முடிவு செய்யப்படும் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையில், பரிசோதனை முடிவுகளை பெறுவதற்காக பேரறிவாளன் நேற்று காலை 9.20 மணிக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். சிறுநீரக தொற்று பரிசோதனையிலும், முழு உடல் பரிசோதனையிலும் அவருக்கு பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து, ஒரு வாரத்துக்கான மாத்திரைகள் மட்டும் அவருக்கு வழங்கப்பட்டன. 9.45 மணிக்கு அவரை போலீஸார் மீண்டும் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

பாதுகாப்புக்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் மருத்துவ மனை வளாகத்தில் குவிக்கப் பட்டிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்