ஆவடி ராணுவ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த 2 இளைஞர்கள் கைது

By செய்திப்பிரிவு

ஆவடியில் உள்ள ராணுவ வீரர் களுக்கான ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையில் பயிற்சிக்கான எழுத்துத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக இரு வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி யில் ராணுவ வீரர்களுக்கான உடை தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான இந்த தொழிற் சாலையில் டெய்லர் பணி பயிற்சி பெறுவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஏப்ரல் 12-ம் தேதி நடந்தது. ஆவடியில் நடந்த இந்த தேர்வில் 1,200-க்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர்.

அதில் தேர்ச்சி பெற்றவர்களில் முதல் கட்டமாக 57 பேரின் சான்றிதழ் சரிபார்க்கும் பணி, நேற்று முன் தினம் நடந்தது. அப்போது, தேர்ச்சி பெற்றவர்களின் கைரேகையை யும், அவர்கள் தேர்வு எழுதிய போது பதிவு செய்யப்பட்ட கை ரேகையையும் ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

இதில், பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜன்ராஜ் (21), மஞ்சித் குமார் (18) ஆகிய இருவரின் கைரேகைகள், அவர்கள் தேர்வு எழுதிய போது இருந்த கைரே கைகளுடன் பொருந்த வில்லை. அவர்கள் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியிருந்தது விசார ணையில் தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த ஆவடி டேங்க் போலீஸார் இரு வரையும் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். ஆவடி கனரக தொழிற்சாலை பயிற் சிக்கான எழுத்துத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த 13 வடமாநில இளைஞர்கள் கடந்த வாரம் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்