முல்லை பெரியாறு நீர்மட்டம் 125 அடியை தாண்டியது

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 125 அடியை தாண்டி யது. இந்நிலையில், வைகை அணையில் நீர் தேக்க 600 கன அடி தண்ணீர் கூடுதலாகத் திறக்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந் துள்ளதால், பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்து, போக்கு வரத்து பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில், மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 நாட்களாக பெரியாறு அணை நீர்பிடிப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும், அணையில் 8 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் நீர்மட்டம் 123.40 அடியாகவும், நீர் வெளியேற்றம் 400 கன அடியாகவும் இருந்தது. நேற்று 2 அடி உயர்ந்து 125.40 அடியானது. நீர்வரத்து விநாடிக்கு 5,948 கன அடியாகவும், வெளி யேற்றம் 1000 கன அடியாகவும் இருந்தது.

வைகைக்கு நீர் திறப்பு

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல்போக சாகுபடிக்கும், தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காகவும் கடந்த 20 நாட்களுக்கு மேலாக விநாடிக்கு 400 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வந்தது. ஆனால், வைகை அணை நீர் பிடிப்பு பகுதியில் குறைந்த அளவு மழை பெய்ததால் நீர்மட்டம் உயர வில்லை. இதனால் அணையில் நீர் தேக்கும் பொருட்டு, விநாடிக்கு 600 கன அடி கூடுதலாக திறக்கப்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்