ஆவடியில் ‘உலக சாதனை திருவிழா’: நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

ஆவடியில், தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் உலக சாதனையாளர்கள் பங்கேற்கும் ‘உலக சாதனை திருவிழா’ என்ற நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி சத்தியமூர்த்தி நகர் - அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில், ‘சாதனை தமிழகம்’ என்ற தொண்டு நிறுவனம் சார்பில், ‘உலக சாதனை திருவிழா- 2015’ என்ற நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.

தமிழகத்தைச் சேர்ந்த உலக சாதனை யாளர்கள் 500 பேர், ஒரே இடத்தில் தொடர்ந்து 108 மணி நேரம் தங்களது சாதனை திறன்களை இந்நிகழ்ச்சியில் வெளிப்படுத்துகின்றனர். இந்நிகழ்ச்சி, வரும் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சிறுவன் ஒருவன் கண்ணைக் கட்டிக் கொண்டு டிரம்ஸ் வாசித்து பார்வையாளர்களை அசத்தினான். மற்றொரு சிறுவன், பலவித யோகாசனங்களை தொடர்ந்து செய்து அனைவரையும் கவர்ந்தான். விழாவை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். துணை ஆட்சியர் (பயிற்சி) திவ்யாஸ்ரீ, அம்பத்தூர் வட்டாட்சியர் லதா, ‘சாதனைத் தமிழகம்’ தொண்டு நிறுவனத் தலைவர் டாக்டர் பாபு பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்