கருணாநிதியின் சகோதரி சண்முக சுந்தரத்தம்மாள் உடல் தகனம்

By செய்திப்பிரிவு

திமுக தலைவர் கருணாநிதியின் சகோதரி சண்முக சுந்தரத்தம்மாள் உடல் பெசன்ட் நகர் மின் மயானத் தில் நேற்று தகனம் செய்யப்பட்டது.

கருணாநிதியின் 2-வது மூத்த சகோதரியும், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாற னின் தாயாருமான சண்முக சுந்தரத் தம்மாள் (99), கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் நேற்று முன்தினம் காலமானார். அவரது உடலுக்கு கருணாநிதி, மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட அவரது உறவினர்களும், திமுகவினரும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங் கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங் கோவன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட் டோரும் அஞ்சலி செலுத்தினர்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நடிகர் பிரபு உள்ளிட்டோர் நேற்று காலை அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், சண்முக சுந்தரத்தம் மாளின் உடல் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத் தில் கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி உள்ளிட்ட குடும்பத்தினரும், திமுகவினரும் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்