வங்கி ஊழியர்களுக்கு 15 சதவீத ஊதிய உயர்வு: சங்கத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து

வங்கி அதிகாரிகள், ஊழியர் களுக்கு 15 சதவீத ஊதிய உயர்வு அளிக்கும் ஒப்பந்தம் மும்பையில் நேற்று கையெழுத்தானது.

வங்கி ஊழியர்கள், அதிகாரி களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை வங்கி ஊழியர் சங்கங்கள் நடத்தின. பல கட்ட பேச்சுவார்த்தைகளும் நடை பெற்றன.

இறுதியாக வங்கி ஊழியர்கள், அதிகாரிகளுக்கு 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 15 சதவீத ஊதிய உயர்வு, 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை, ஊழியர் களுக்கான மருத்துவ செலவை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்பதாக இந்திய வங்கிகள் சங்கம் கடந்த பிப்ரவரி 23-ம் தேதி மும்பையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அறிவித்தது. மேலும், கோரிக்கைகளை அமல்படுத்த 90 நாட்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொள்ளவும் பேச்சுவார்த்தையில் அப்போது முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், மும்பையில் இந்திய வங்கிகள் சங்கத்துடன் 9 தொழிற்சங்க நிர்வாகிகள் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டனர். இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் சி.எச்.வெங்கடாசலம் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தத்தின் மூலம் 25 பொதுத்துறை வங்கிகள், 11 தனியார் வங்கிகள் மற்றும் 6 அயல்நாட்டு வங்கிகளைச் சேர்ந்த 4.80 லட்சம் ஊழியர்கள் மற்றும் 3.20 லட்சம் அதிகாரிகள் பயனடைவர். 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் முன்தேதியிட்டு இந்த ஊதிய உயர்வு வழங்கப்படும். இதன் காரணமாக வங்கி நிர்வா கங்களுக்கு ஆண்டுக்கு ரூ.4 ஆயிரத்து 725 கோடி கூடுதலாக செலவாகும்

இந்த ஒப்பந்தம் மூலம் பஞ்சப்படி, வீட்டு வாடகைப்படி, வாகனப்படி ஆகியவை உயரும். மேலும் ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்துக் கான மருத்துவ செலவை வங்கி நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும். ஊதிய உயர்வு பலன்கள் 90 நாட்களுக்குள் அமல்படுத்தப் படும்.

மேலும், இந்த ஒப்பந்தத்தின் படி அனைத்து வங்கிகளுக்கும் 2 மற்றும் 4-வது சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படும். அதற்குப் பதிலாக முதல் மற்றும் 3-வது சனிக்கிழமைகளில் வங்கிகள் முழுநேரம் செயல்படும்.

இவ்வாறு சி.எச்.வெங்கடாசலம் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்