இந்தியாவில் 3 மாதங்களில் 1.29 லட்சம் பேர் மலேரியாவால் பாதிப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல்

இந்தியாவில் 3 மாதத்தில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 852 பேர் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

இந்தியாவில் பொது சுகாதாரத் துக்கு மிகப்பெரிய அச்சுறுத் தலாக மலேரியா காய்ச்சல் உருவெடுத்துள்ளது. ஒடிஸா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், மகாராஷ் டிரா, மேகாலயா, திரிபுரா போன்ற பல்வேறு மாநிலங்களில் மலேரியா வால் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மட்டும் நாடு முழுவதும் 1 லட்சத்து 29 ஆயிரத்து 852 பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் காய்ச்சலின் தீவிரத்தால் 30 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகப்படியாக ஒடிஸா மாநிலத்தில் 45 ஆயிரத்து 392 பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டு, 9 பேர் பலியாகி யுள்ளனர். தமிழகத்தில் 915 பேர் மலேரியாவால் பாதிக்கப்பட் டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ‘அனாபிளஸ்’ எனும் ஒரு வகை பெண் கொசுவே மலேரியாவை பரப்புகிறது. இந்த வகை கொசுக்கள் சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகிறது. ‘அனாபிளஸ்’ கொசு மலேரியாவால் பாதிக்கப்பட்டவரை கடித்துவிட்டு, மற்றவரை கடிப்பதால் அவருக்கு மலேரியா பரவுகிறது. மலேரியாவில் சாதாரண மலேரியா, பால்சிபேரம் மலேரியா, வைவாக் மலேரியா, ஓவேல் மலேரியா என பல வகைகள் உள்ளன. இதில் பால்சிபேரம் மலேரியாவுக்கு உடனடியாக சிகிச்சை பெறாவிட்டால் கல்லீரல், சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். சில சமயங்களில் உயிரிழப்பையும் ஏற்படுத்தும்.

நாடு முழுவதும் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பால்சிபேரம் மலேரியாவால் 89,149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடமாநிலங்களில் பால்சிபேரம் மலேரியாவால் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறனர்.

அவர்கள் சிகிச்சைக்காக தமிழகத்தில் சென்னை போன்ற முக்கிய நகரங்களுக்கு வருகின் றனர். அவர்களிடம் இருந்து பால்சிபேரம் மலேரியா, மற்றவர் களுக்கும் பரவுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

43 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்