சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை பற்றி மனசாட்சிப்படி மக்களுக்கு பதிலளிப்பாரா ஜெயலலிதா?- மதுரை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கேள்வி

By செய்திப்பிரிவு

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா எப்படி விடுதலை வாங்கினார் என்பதை அவரது மனசாட்சியிடமே கேட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மதுரை அருகே ஒத்தக்கடையில் நேற்று திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் துணை பொதுச் செயலர் ஐ.பெரியசாமி தலைமை வகித்தார். மதுரை வடக்கு மாவட்ட செயலர் பி.மூர்த்தி வரவேற்றார்.

இதில் மு.க.ஸ்டாலின் பேசியது: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா எப்படி ஜாமீன் பெற்றார். எப்படி விடுதலை வாங்கினார் என நியாயம் கேட்டு நான் வரவில்லை.

18 ஆண்டுகளாக இழுத் தடிக்கப்பட்ட வழக்கு மேல் முறையீடு செய்யப்பட்ட 3 மாதங்களில் முடிந்த மர்மம் என்ன? 2001-ல் டான்சி வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவை குற்றமற்றவர் என சொல்லவில்லை. டான்சி நிலத்தை முதல்வர் அடிமாட்டு விலைக்கு வாங்கியது தவறு. அதை உடனே அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றுதான் தீர்ப்பளித்தார்.

நீதிபதி சுட்டிக்காட்டியபடி மனசாட்சிக்கு இதுவரை ஜெய லலிதா பதில் சொல்லவில்லை. இன்று விடுதலையை வாங்கி யுள்ளார். எப்படி வாங்கினார் என அவரது மனசாட்சியை கேட்டு நாட்டு மக்களுக்கு தெரிவித்தால் வரவேற்கிறேன். இதைத்தான் மக்களும் எதிர் பார்க்கின்றனர்.

சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின்போது நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா தரப்புக்கு 35 மதிப்பெண் மட்டுமே வழங்க முடியும் எனக் கூறியது நீதிமன்றக் குறிப்பில் இடம் பெற்றுள்ளது.

35 மதிப்பெண் பெற்ற ஜெயலலிதா எப்படி விடுதலையானார் என மக்கள் மன்றமான உங்களிடம் நீதி கேட்டு வந்துள்ளேன். மேல் முறையீடு செய்ய 90 நாள் அவகாசம் உள்ளது.

2011-ல் அதிமுக ஆட்சிக்கு வர தீர்ப்பளித்தீர்கள். இந்த தீர்ப்பை எதிர்த்து 5 ஆண்டுகளுக்கு மேல்முறையீடு செய்ய முடியாது.

இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் நீதி, நியாயம் கேட்டு வந்துள்ளேன். சேது சமுத்திர திட்டம், தாமிரபரணி நதிநீர் இணைப்பு திட்டம், மதுரை-தூத்துக்குடி தொழில்முனைய திட்டம், உடன்குடி மின்திட்டம் என பல திட்டங்கள் முடங்கிப் போய்விட்டது.

76,000 கோடி வெளிநாட்டு முதலீட்டை பெற உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த 100 கோடி செலவிட்டும் நடந்ததா? தொழில் துறையில் முதலிடத்துக்கு வரும் சூழ்நிலையை திமுக ஏற்படுத்தியது.

தற்போது தமிழகம் தொழில் துறையில் கடைசி இடத்துக்கு சென்றுவிட்டது. திமுக ஆட்சியில் இலவச வண்ணத்தொலைக்காட்சி வழங்குவதற்கான டெண்டரில் வெளிப்படை தன்மை இருந்தது. தற்போது மிக்ஸி, கிரைண்டர், லேப்டாப் என இலவச பொருட்கள் வழங்குவதில் வெளிப்படை தன்மை இருக்கிறதா?

அதிகாரிகளை வைத்து லஞ்சம் வாங்கு கின்றனர். பொதுப்பணி, நெடுஞ் சாலை, உள்ளாட்சி துறை ஒப்பந்தப் புள்ளியில் ஊழல் நடக்கிறது. அதிமுகவினருக்கு மட்டுமே பணிகள் வழங்கப்படுகிறது. தாது மணலில் ரூ.1 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்தது குறித்த அறிக் கையை இதுவரை மக்கள் மன்றத்தில் வெளியிடாதது ஏன்?

பருப்பு கொள்முதலில் ஆண்டுக்கு 110 கோடி, முட்டை கொள்முதலில் 97 கோடி, ஆவின் பாலில் கலப்படம் என அனைத்திலும் ஊழல் நடக்கிறது. இதை நான் கூறுவதால் என் மீது வழக்கு போட்டால் சந்திக்க தயாராக உள்ளேன். எதிர்க்கட்சியினர், பத்திரிகைகள் மீது வழக்கு போடுகின்றனர். ஜெயலலிதா முதல்வராக 2011-ல் பதவியேற்ற போது வாரம்தோறும் பத்திரிகையாளர்களை தேடி வந்து சந்திப்பேன் என்றாரே ஒருமுறையாவது சந்தித்துள்ளாரா?

இந்த ஆட்சியில் அனைத்து தரப்பு அரசு ஊழியர்களும் போராட்டம் நடத்துகின்றனர். குடிநீர் கேட்டு மக்கள் வீதிக்கு வந்து மறியல் நடத்துகின்றனர். அரசை நீதிமன்றமே பலமுறை கண்டித்துள்ளது.

வீடுகட்ட 1 லட்சம் மானி யம், வீட்டுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக தருவதாக கூறியவர்கள் யாருக்காவது தந்தனரா? அம்மா பெயர் வைத்து ஒரு லிட்டர் குடிநீரை ரூ.10-க்கு விற்கின்றனர். குடிநீரை மக்களுக்கு விற்பது இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான். தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி சமூக மேம்பாட்டு திட்டம், மின் பற்றாக்குறை, இளைஞர்களுக்கு வேலை என எந்த திட்டத்தையும் கடந்த 4 ஆண்டுகளாக அதிமுக அரசு நிறைவேற்றவில்லை. மக்களை பற்றி கவலைப்படாத இந்த அரசுக்கு எதிராக கோபம் வர வேண்டாமா? இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட ஒன்றுபட வேண்டும். நல்ல மாற்றத்தை தமிழகத்தில் கொண்டு வருவோம். இந்த ஆட்சியை பார்த்து தொடர்ந்து கேள்வி கேட்போம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்