எம்ஏஎம் ராமசாமி ஆதரவாளர்கள் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

கொலை மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து எம்.ஏ.எம்.ராமசாமி யின் உதவியாளர் ராஜேந்திரன் உட்பட 3 பேர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்கள் நீதிமன் றத்தில் நேற்று தள்ளுபடி செய் யப்பட்டன.

சென்னை ராஜா அண்ணா மலைபுரம் செட்டிநாடு அரண் மனையின் பாதுகாப்பு அதிகாரி பி.அழகு (59), பட்டினம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார்.

அதில், ‘கடந்த 24-ம் தேதி காலை 8.30 மணி அளவில் செட்டிநாடு நிறுவன நிர்வாக இயக்குநர் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையாவை (எம்.ஏ.எம்.ராமசாமியின் வளர்ப்பு மகன் ஐயப்பன்), எம்.ஏ.எம்.ராமசாமியின் உதவியாளர் ராஜேந்திரனின் தூண்டுதலால் ஜேம்ஸ் என்பவர் வழிமறித்து கொலை செய்துவிடுவேன் என்று மிரட் டினார். அவருடன் வந்த கூலிப் படையைச் சேர்ந்த 30 பேரும் ஆயுதங்களுடன் முத்தையாவை தாக்க முற்பட்டனர்’ என்று கூறப் பட்டிருந்தது.

புகாரின் பேரில் ஜேம்ஸ் உள்ளிட்டோர் மீது பட்டினம் பாக்கம் காவல்துறையினர் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, முன்ஜாமீன் வழங்கக் கோரி எம்.ஏ.எம்.ராமசாமியின் உதவியாளர் ராஜேந்திரன், சிதம்பரம் நகராட்சி உறுப்பினர்கள் ஜேம்ஸ், மாமல்லன் ஆகியோர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி கயல்விழி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. 3 பேருக்கும் முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று சென்னை மாநகர அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து 3 பேரின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்