காயமடைந்த மணிப்பூர் கபாடி வீரர்களுக்கு தீவிர சிகிச்சை: அரசு மருத்துவமனையில் குவிந்த உறவினர்கள்

By எம்.மணிகண்டன்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலை யத்தில் நடந்த குண்டுவெடிப்பில் படுகாயம் அடைந்த மணிப்பூர் மாநில கபாடி வீரர்கள் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரைத் தேடி வெளி மாநிலங்களில் இருந்து உற வினர்கள் வந்தபடி இருந்தார்கள்.

வெளி மாநிலத்தவர்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலை யத்தில் வியாழக்கிழமை காலை யில் பெங்களூரு குவாஹாட்டி ரயிலில் இரு குண்டுகள் வெடித் தன. இந்த சம்பவத்தில் குண்டூரை சேர்ந்த ஸ்வாதி என்னும் இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதவிர இச்சம்பவத்தில் காயமடைந்த 14 பேர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வர்களில் பெரும்பாலானவர்கள் ஆந்திரம், கர்நாடகம், அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங் களைச் சேர்ந்தவர்கள். பாதிக்கப் பட்டவர்களின் உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களில் அருகில் உள்ள ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் உறவினர்கள் மட்டும் பிற்பகலில் மருத்துவமனைக்கு வந்தனர். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர்.

தம்பியைத் தேடி

ஆந்திர மாநிலம் குண்டூர் சிராலா பகுதியை சேர்ந்த ஆஞ்ச நேயாவின் சகோதரர் ராமாராவ் என்பவர் கூறுகையில், “என் தம்பி பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் இன்ஜினீயராக பணியாற்றி வருகிறார். 4 நாட்கள் விடுமுறை என்பதால் ஊருக்கு வருவதற்காக புதன்கிழமை ரயில் ஏறினார். ஆனால் திடீரென்று அவர் வந்த ரயிலில் குண்டு வெடித்ததாக தகவல் கிடைக்கவே பதறிப்போய் வந்துள்ளேன்” என்றார்.

மேலும் மணிப்பூரிலிருந்து கர்நாடகாவுக்கு கபாடி போட்டிக் காக வந்த அம்மாநிலத்தை சேர்ந்த 20 பேர் கொண்ட குழுவில் 2 பேருக்கு இடுப்பு மற்றும் கால் களில் காயம் ஏற்பட்டுள்ளது. அந்த கபாடி அணியின் பயிற்சியாளர் இபுங்கொச்சவுபா சிங் கூறுகை யில், “காலையில் ரயில் சென்ட்ரல் நிலையத்தில் நின்றதையடுத்து பிளாட்பாரத்தில் உள்ள கடை ஒன்றில் தேநீர் அருந்திக் கொண் டிருந்தேன்.

அப்போது எஸ்5 பெட்டியிலிருந்து பயங்கர வெடிச் சத்தம் கேட்டது. ஓடிச்சென்று பார்த்தால் எங்களுடன் வந்த அல்தாப்கான் (17), பிஜாய் குமார் (14) ஆகியோர் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். உடனே, அங்கிருந்தவர்கள் துணையோடு அவர்களை மருத்துவமனையில் சேர்த்தோம்” என்றார்.

இந்த சம்பவம் பற்றி மருத்துவத் துறை இயக்குநர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 50 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. 12 பேருக்கு சாதாரண காயம் ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந் துள்ள 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அப்துல் ரஹீம், டிஜிபி ராமானுஜம், பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பாதிக் கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்