சென்னையில் கலப்பட மணல் விற்பனை அதிகரிப்பு: கட்டிடங்களில் விரிசல் விழும் அபாயம்

By டி.செல்வகுமார்

சென்னையில் கலப்பட மணல் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த மணலில் கட்டும் கட்டிடங்களில் இரண்டே ஆண்டுகளில் விரிசல் விழும் அபாயம் இருப்பதாக பொறியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கட்டுமானப் பணியில் மணல் முக்கியப் பங்கு வகிக்கிறது. கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடப்பதால், மணலுக்கான தேவையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

இதுகுறித்து சென்னை கட்டுமானப் பொறியாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் கோ.வெங்கடாசலம் கூறியதாவது:-

கலப்பட மணல் 3 விதமாக விற்கப்படுகிறது. சவுடு மண்ணை (வாய்க்கால் மண்) ஆற்று மணல் என்று சொல்லி விற்கிறார்கள். மேலும் ஆற்று மணலில் சவுடு மண்ணைக் கலந்தும், ஆற்று மணலில் கடற்கரை மணலைக் கலந்தும் விற்கின்றனர். மாதவரம், திருமுல்லைவாயில் பகுதிகளில் இருந்து பெறப்படும் பொடி போன்ற சவுடு மண்ணை ஆற்று மணல் எனக் கூறி விற்கிறார்கள். இந்த மண்ணில் 40 சதவீதம் களிமண் இருப்பதால் கட்டுமானப் பணிக்கு ஏற்றதல்ல. அதையும் மீறி கட்டிடம் கட்டினால் 2 ஆண்டுகளில் பாளம்பாளமாக விரிசல் விழும். இடிந்து விழும் அபாயமும் உள்ளது. ஒரு யூனிட் (100 கனஅடி) ஆற்று மணல் ரூ.4500-க்கு விற்கப்படுகிறது. ஒரு யூனிட் கலப்பட மணல் ரூ.3,800 முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கிரெடெய் தமிழ்நாடு முன்னாள் தலைவர் என்.நந்தகுமார் கூறும்போது, “பெயர் கெட்டுவிடும் என்பதால் பில்டர்கள் யாரும் கலப்பட மணல் வாங்கிப் பயன்படுத்துவதில்லை. மணலின் தரம் பற்றி தெரியாத அப்பாவி மக்களே கலப்பட மணலை வாங்கி ஏமாறுகின்றனர். அதிலுள்ள ஆபத்தை அவர்கள் உணரவில்லை. எனவே, கலப்பட மணல் விற்பனையைத் தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, “கலப்பட மணல் விற்பனையை கட்டுப்படுத்தும் முறை இப்போது இல்லை. கலப்பட தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் புகார் கொடுத்தால், நாங்கள் உணவு கலப்படத்தை மட்டுமே கவனிக்கிறோம் என்பார்கள். பொதுப்பணித் துறை மற்றும் சுரங்கங்கள் மற்றும் கனிமவளங்கள் துறையினரோ தங்களுக்கும் கலப்பட மணல் விற்பனைக்கும் சம்பந்தம் இல்லை என்று தட்டிக் கழித்துவிடுவார்கள். கலப்பட மணல் விற்பனையை தடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்போ, அதிகாரிகளோ இல்லாததால் மக்கள்பாடுதான் திண்டாட்டம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்