திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் 20 தமிழர்கள் கடந்த மாதம் 7-ம் தேதி ஆந்திர அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை விசாரிக்க தமிழரான ஐ.ஜி. ரவி சங்கர் அய்யனார் தலைமையில் 8 பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை ஆந்திர அரசு அமைத்திருக்கிறது.
தமிழரான ரவிசங்கர் நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகிலுள்ள பாப்பாங்குளத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை அய்யனார் இந்திய விமானப்படையில் ஹெலிகாப்டர் பைலட்டாக பணியாற்றியவர்.
ஐ.பி.எஸ். அதிகாரியான ரவி சங்கர், ஆந்திராவில் மாவோ யிஸ்ட்களை ஒடுக்குவதில் தீவிரம் காட்டி வருபவர். இவர் தலை மையில் விசாரணை நடத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுகுறித்து ’தி இந்து’விடம் ஆந்திராவிலுள்ள தேசிய பழங் குடியின மக்களுக்கான மனித உரிமை இயக்கத்தின் அமைப்பாளர் சுப்பா ராவ் கூறியதாவது:
மாவோயிஸ்ட் ஆபரேஷன் என்கிற போர்வையில் குண்டூர் மாவட்டத்தில் 2014-ல் மட்டும் 22 பேரை சுட்டுக் கொன்றிருக்கிறார் ரவிசங்கர். 2011-லிருந்து 2014 அக்டோபர் வரை 11 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டிருக்கிறார்கள். செம்மரக் கடத்தல்காரர்கள் என கைது செய்யப்பட்டவர்களில் கடப்பா, ராஜமுந்திரி சிறைகளில் தலா ஒருவரும் நெல்லூர் சிறையில் இருவரும் உயிரிழந்துள்ளனர். மலையாளி சமூகத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்ற இளைஞரை 2013 டிசம்பரிலிருந்து காணவில்லை. இதற்கெல்லாம் இதுவரை நீதியும் கிடைக்கவில்லை. எனவே ரவிசங்கர் தலைமையிலான குழுவினர் விசாரணைக்கு தடை விதித்து முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் ஒருவர் மூலமாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என ஆந்திர உயர் நீதிமன்றத்தில் சிவில் லிபர்ட்டி கமிட்டியின் செயலாளர் வழக் கறிஞர் ரகுநாதன் ரிட் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
அதற்கு, ரவி சங்கர் இதுவரை நடத்தியுள்ள என்கவுன்ட்டர் குறித்து தகுந்த ஆதாரங்களுடன் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது விரைவில் ஆதாரங்களை தாக்கல் செய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago