சென்னையில் திறக்கப்பட்ட அம்மா உணவகங்கள்

தமிழகம் முழுவதும் 201 ‘அம்மா’ உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார். அதில் சென்னையில் திருவொற்றியூர், சோழிங்கநல்லூர் தவிர மாநகராட்சியின் 13 மண்டலங்களிலும் 45 இடங்களில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

மணலி மண்டலத்தில் ஆண்டார் குப்பம், செங்குன்றம் சாலை, அரிகிருஷ்ணபுரம், ராயபுரம் மண்டலத்தில் புதுவண்ணாரப் பேட்டை கண்ணன் பிள்ளை தெரு மற்றும் ஜெ.ஜெ.நகர், ராயபுரம் எம்ஜிஆர் நகர், திருவிக நகர் மண்டலத்தில் திருவிக நகர், அண்ணாநகர் மண்டலத்தில் வெங்கடாசலம் தெரு, கோடம் பாக்கம் மண்டலத்தில் தெற்கு உஸ்மான் சாலை, வளசரவாக்கம் மண்டலத்தில் திருமலை நகர் என 45 இடங்களில் திறக்கப்பட்டுள்ளன.

திருவள்ளூர், காஞ்சியில்..

திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், ஆவடி, திரு வேற்காடு, பூந்தமல்லி, திருத்தணி ஆகிய 5 நகராட்சி பகுதிகளில் தலா ரூ.25 லட்சம் மதிப்பில் 7 அம்மா உணவகங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இவற்றில் இரண்டு திருவள்ளூர் மற்றும் ஆவடி அரசு மருத்துவமனை வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உணவகங்களை பால் வளத்துறை அமைச்சர் ரமணா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அப்துல்ரஹீம், மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆகியோர் பார்வையிட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், மறைமலைநகர் ஆகிய ஊர்களில் உள்ள அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் பம்மல், அனகாபுத்தூர், தாம்பரம், செம்பாக்கம் ஆகிய நகராட்சி பகுதிகள் என மொத்தம் 13 இடங் களில் நேற்று அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன.

குறைந்த விலை பருப்பு

குறைந்த விலை துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு விற்பனை திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார். சென்னையில் 25 விற்பனை மையங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விவரம்:

# திருவல்லிக்கேணி கூட்டுறவு விற்பனை சங்கத்தின் அண்ணா சாலை, ஆர்.ஏ.புரம், பெசன்ட் நகர், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, திருவல்லிக் கேணி, அசோக் நகர், ராயப் பேட்டை நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், செனாய் நகர், பெரியார் நகர், மீனம்பாக்கம் மற்றும் ஒக்கியம் துரைப்பாக்கம் விற்பனைமையங்கள்.

# பூங்காநகர் மொத்த விற்பனை பண்டக சாலையின் அண்ணா நகர் கிழக்கு, செனாய் நகர், அசோக்நகர் கடைகள்.

# அடையாறு மகளிர் கூட்டு றவு பண்டகசாலை விற்பனை நிலையம், ஆர்.வி.நகர் வட சென்னை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம், ராயபுரம் வண்ணாரப்பேட்டை கூட்டுறவு பண்டகசாலை .

# காஞ்சிபுரம் மொத்த விற்பனை பண்டகசாலையின் நந்தம் பாக்கம், போரூர் விற்பனை மையங்கள்

# தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பெரியார் நகர், இந்திராநகர், கோபா லபுரம், அண்ணாநகர் மேற்கு மற்றும் நந்தனம் அமுதம் அங்காடிகள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்