கருணாநிதிக்கு தாயாக திகழ்ந்த சண்முக சுந்தரத்தம்மாள்: திமுகவினர் உருக்கம்

By எம்.மணிகண்டன்

திமுக தலைவர் கருணாநிதிக்கு தாயாக திகழ்ந்தவர், அவரது மூத்த சகோதரியான சண்முக சுந்தரத்தம்மாள் என திமுகவினர் உருக்கத்துடன் தெரிவித்தனர்.

கருணாநிதியின் 2-வது மூத்த சகோதரியும், முரசொலி மாறனின் தாயாருமான சண்முக சுந்தரத்தம்மாள் சென்னையில் நேற்று காலமானார். அவரது மறைவால் கருணாநிதி பெரும் துக்கத்தில் ஆழ்ந்திருப்பதாக திமுகவினர் தெரிவிக்கின்றனர். அரசியல் களத்திலும், குடும்பத்திலும் பிரச்சினைகளை எதிர்கொண்ட போதெல்லாம் கருணாநிதிக்கு ஆத்ம ரீதியான உறுதுணையாக திகழ்ந்தவர் அவரது சகோதரி என்று குறிப்பிடுகின்றனர்.

கருணாநிதிக்கும், சண்முக சுந்தரத்தம் மாளுக்கும் இடையேயான பாசப் பிணைப்பு குறித்து திமுக மூத்த நிர்வாகி கள் சிலர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

முத்துவேலர், அஞ்சுகம் அம்மையார் தம்பதிக்கு பெரியநாயகி அம்மாள், சண்முக சுந்தரத்தம்மாள் என 2 பெண் குழந்தைகள். வீட்டில் கடைசிப் பிள்ளையாக பிறந்தவர் கருணாநிதி. அவரது முதலாவது மூத்த சகோதரி பெரியநாயகி அம்மாள் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது 95-வது வயதில் காலமானார். தற்போது 2-வது மூத்த சகோதரியான சண்முக சுந்தரத்தம்மாள் தனது 99 வயதில் காலமாகிவிட்டார்.

கருணாநிதிக்கும் சண்முக சுந்தரத்தம் மாளுக்கும் 7 வயது வித்தியாசம். கருணாநிதி இளம்வயதில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியது முதல் பல்வேறு இக்கட்டான சூழல்களில் அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந் தவர் சண்முக சுந்தரத்தம்மாள். கருணா நிதியை எப்போதுமே ‘தம்பி.. தம்பி’ என்று பாசத்தோடு அழைக்கக் கூடியவர்.

முரசொலி மாறனை தனது மனசாட்சி என்று கருணாநிதி கூறி வந்தார். அவரை தனது மருமகன் என்று அல்லாமல் மகனாகவே கருணாநிதி பாவித்து பாசம் காட்டி வளர்த்தார். முரசொலி மாறனின் தாயாரான சண்முக சுந்தரத்தம்மாளோ, கருணாநிதிக்கு வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் திகழ்ந்தார். இவ்வளவு பெரிய அரசியல் இயக்கத்தையும், குடும்பத்தையும் கருணாநிதி சிக்கலின்றி நடத்துவதற்கு அவரது பங்களிப்பு மிக முக்கியமானது.

கருணாநிதியின் முதல் மனைவி மறைந்தபோது, ‘கவலைப்படாதே தம்பி’ என்று ஆறுதல் கூறி அவருக்கு தயாளுவை திருமணம் செய்து வைத்து மகிழ்ந்தவர் சண்முக சுந்தரத்தம்மாள்தான். குடும்பத்தில் பிரச்சினை, மக்களவை தேர்தல் தோல்வி, ஆட்சியில் இல்லாத நிலை, திமுக உட்கட்சி பிரச்சினைகள் என கடந்த சில ஆண்டுகளாக கருணாநிதிக்கு பல கவலைகள். அவற்றுக்கெல்லாம் மேலாக தனது சகோதரியின் உடல் நிலை குறித்த கவலை அவருக்கு இருந்தது. அஞ்சுகம் அம்மையார் மறைவுக்குப் பிறகு அத்தனை சோதனையான காலகட்டங்களிலும் தனக்கு துணை நின்ற சண்முக சுந்தரத்தம்மாளை தனது தாயாகவே கருதி பாசம் காட்டி வந்தார். அப்படிப்பட்ட சகோதரியை, தாயை கருணாநிதி இழந்திருக்கிறார். அவர் அடைந்திருக்கும் துக்கம் அளவிட முடியாதது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்