எம்பிபிஎஸ் படிப்பு விண்ணப்ப விற்பனை நாளை கடைசி

தமிழகத்தில் 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் மொத்தம் 2,555 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. 2015 - 2016-ம் கல்வியாண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விற்பனை கடந்த 11-ம் தேதி தொடங்கியது. இதுவரை (நேற்று வரை) 34,260 விண்ணப் பங்கள் விற்பனையாகியுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட 17,843 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன. வரும் 28-ம் தேதி (நாளை) மாலை 5 மணி வரை விண்ணப்ப விற்பனை நடைபெற உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 29-ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ “செயலாளர், தேர்வுக்குழு, மருத்துவ கல்வி இயக்ககம், 162, பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600010” என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஜூன் 12-ம் தேதி வெளியிடவும், முதல் கட்ட கவுன்சலிங்கை ஜூன் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடத்தவும் மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) திட்டமிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்